MI vs SRH : பண்ட் போன்று தன்னை நினைத்து விளையாடி விக்கெட்டை இழக்கிறார்- மஞ்சரேக்கர் விளாசல்

மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தனது கருத்தினை தெரிவித்தார்.

Sanjay
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 19 ஆவது போட்டி நேற்று முன்தினம் ஹைதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

Bhuvi

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி துவக்கத்தில் இருந்தே விக்கெட்டினை இழந்துவந்தது. மும்பை அணியின் பொல்லார்ட் மட்டும் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். மத்தபடி யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆடவில்லை. இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே அடித்தது.

அதை தொடர்ந்து விளையாடிய சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் சீட்டுக்கட்டுபோல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒருவர்கூட 20 ரன்களை கடக்கவில்லை. மும்பை அணியின் அறிமுக வீரரான அல்சாரி ஜோசப் சிறப்பாக பந்துவீசி 12 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் சன் ரைசர்ஸ் அணி 17.4 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Vijay-Shankar

இந்த போட்டி குறித்து பேசிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் : சன் ரைசர்ஸ் அணியின் வீரரான விஜய் ஷங்கர் தன்னை பண்ட் என்று நினைத்துக்கொண்டு அனைத்து பந்துகளையும் அடிக்க ஆசைப்பட்டு தனது விக்கெட்டை பறிகொடுக்கிறார். அவர் அது போன்று எல்லா பந்துகளையும் அதிரடியாக எதிர்கொள்ளக்கூடாது. உண்மையில் அவர் பெரிய ஹிட்டர் தான் அதனை ஒத்துக்கொள்கிறேன்.

அவர் சற்று நிதானத்துடன் அணிக்கு தேவைப்படும்போது அதிரடியாக ஆடி மற்ற நேரத்தில் பொறுமையாக ஆடினால் விராட் கோலி போன்று வருவார் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தனது கருத்தினை தெரிவித்து உள்ளார்.

Advertisement