- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவரை பத்தி அதிகமா யோசிக்காதீங்க.. அவருக்கு எல்லாம் தெரியும்.. இந்திய வீரருக்கு முன்னாள் வீரர் ஆதரவு

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி தங்களது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

அதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேச அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கி மோசமான ஆட்டத்தை விளையாடி வரும் விராட் கோலி மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ள வேளையில் அவரது ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அனைவரின் மீது மத்தியிலும் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 24 ரன்களில் அவர் ஆட்டம் இழந்தாலும் மெதுவாக விளையாடியது அவர் மீது ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இருந்தது.

மேலும் அவர் துவக்க வீரராக களம் இறங்க வேண்டாம் என்றும் பழைய இடமான மூன்றாவது இடத்திலே அவர் விளையாட வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் அவரை சுற்றி எழுந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் விராட் கோலி குறித்து கவலைப்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் மேலும் அவர் பற்றி யோசிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தினை இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசி அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரின் சுனில் நரேன் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் எவ்வாறு அசத்துகிறாரோ அதேபோன்று பும்ரா அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் அசத்தலாக செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவை விட வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் பும்ரா இன்னும் சிறப்பாக செயல்படுகிறார். உலகின் இதர தலை சிறந்த பவுலர்களுக்கும் பும்ராவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

இதையும் படிங்க : வங்கதேசத்தை புரட்டி எடுத்து இந்தியா 100/0ன்னு துவங்குவாங்க.. காரணம் இது தான்.. லாரா அதிரடி கணிப்பு

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பும்ரா இருப்பது அதிர்ஷ்டம். இதையெல்லாம் கவனிக்க வேண்டும் அதை விடுத்து விராட் கோலி குறித்து யோசிப்பது தேவையில்லாத ஒன்று அவர் போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் நிச்சயம் ஓரிரு ஆட்டத்தில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -