அடுத்த ஐ.பி.எல் தொடரில் 2 அணிகளை புதுசா சேர்த்தா இந்த ரூல்ஸ் போட்டே ஆகனும் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் 15வது சீசனில், மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்படும் என்று இதற்கு முன்னரே பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி அஹமதாபாத் மைதானத்தை மையமாக கொண்ட ஒரு அணியும், அது இல்லாமல் மற்றொரு அணியும் உருவாக்கப்படும் என்று கருத்துகள் வெளிவந்தன. இந்த இரண்டு அணிகளை ஏலத்தில் எடுப்பதாற்கான டென்டர் அறிவிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் கொரனா தொற்றின் காரனமாக அதை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது பிசிசிஐ. இதற்கிடையில் அடுத்த வருடம் பத்து அணிகளை கொண்டு ஐபிஎல் தொடரை நடத்தினால், ஒவ்வொரு அணியிலும் 5 வெளிநாட்டு வீரர்களை விளையாட வைக்க வேண்டுமென்று கருத்து கூறியிருக்கிறார், இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இதிகுறித்து அவர் பேசும்போது,

IPL

தற்போதுவரை நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஒரு அணியில் 7 இந்திய வீரர்களும் 4 வெளிநாட்டு வீரர்களும் விளையாடுகின்றனர். அதன்படி பார்த்தால் 56 இந்திய வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடும் வாய்ப்பை பெறுகின்றனர். அடுத்த ஆண்டு பத்து அணிகள் பங்கு பெற்றால், மொத்தம் 70 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே நாம் அதிக இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கிவிட்டோம் என்பதால், அடுத்த ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு 5 வெளிநாட்டு வீரர்களை விளையாட வைக்கும் முடிவை நாம் தாராளமாக எடுக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர், அடுத்த ஆண்டு ஒரு அணியில் 5 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றாலும், மொத்தம் 60 இந்திய வீரர்கள் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள். இதுவே நமக்கு போதுமானதாக இருக்கும். மேலும் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கும் உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்களுக்கு, விளையாடும் அணியில் வாய்ப்பு கொடுக்காமல் அவர்களை வெளியில் அமர வைப்பது வெட்கக்கேடான ஒரு செயல் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ipl-2021

2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபிஎல் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தொடரில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா மற்றும் புனே வாரியர்ஸ் இந்தியா ஆகிய அணிகளை இணைத்து 2011ஆம் பத்து அணிகள் கொண்ட ஐபிஎல் தொடரை நடத்திய பிசிசிஐ, அப்போதும் ஒரு அணிக்கு நான்கு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே விளையாட அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் இந்திய அணிக்கு ஐபிஎல் தொடரினால் தான் பல திறமையான இளம் வீரர்கள் கிடைத்து வருகின்றனர். எனவே ஐபிஎல் தொடரில் அதிகமான இந்திய வீரர்களை வைத்து விளையாடவே பிசிசிஐ விரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement