நான் பேசக்கூடாதுனு பி.சி.சி.ஐ சொன்னதுக்கு இதுதான் காரணம் – சஞ்சய் மஞ்சரேக்கர் பதில்

Sanjay
- Advertisement -

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வர்ணனை குழுவில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் அந்த வர்ணனை குழுவில் சுனில் கவாஸ்கர், சிவராமகிருஷ்ணன் மற்றும் முரளி கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

Sanjay

- Advertisement -

அதனால் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும் அவர் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் அவரின் எதிர்மறையான விமர்சனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவே பிசிசிஐ இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவரின் நடவடிக்கையால் கடும் அதிர்ச்சி அடைந்த பிசிசிஐ அவரை ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர் குழுவில் இருந்தும் நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனை குறித்து சமீப காலமாக பலரும் பலரும் எதிர்மறை விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அவர் எப்பொழுதும் ஒரு சார்பு நிலை உடனே பேசுவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Sanjay

ஏனெனில் ஐபிஎல் போட்டியின்போது மும்பைக்கு ஆதரவாக பேசுவது, இந்திய போட்டிகளின்போது ரவீந்திர ஜடேஜாவை எதிர்த்து பேசுவது மேலும் சக வர்ணனையாளர்களை மட்டம் தட்டிப் பேசுவது என மட்டமான செயல்களை அவர் செய்து வந்துள்ளார். இது இதுகுறித்து ஏற்கனவே ரசிகர்கள் மட்டுமின்றி ஜடேஜாவும் நேரடியாக அவரை தாக்கி பேசியுள்ளார். இந்நிலையில் தற்போது அவரின் நடவடிக்கையின் மீது அதிர்ச்சி அடைந்த பிசிசிஐ அவரை வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.

- Advertisement -

மேலும் இதுகுறித்து எந்த ஒரு பதிலையும் தான் கூற விரும்பவில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தான் நீக்கப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் எப்பொழுதும் வர்ணனையாளர் பணியை பெருமையாக கருதுகிறேன். ஒருபோதும் அதனை உரிமையாக நான் நினைத்தது இல்லை.

என்னை குழுவில் வைத்திருக்க வேண்டுமா ? வேண்டாமா ? என்பது பிசிசிஐ முடிவு. அதை நான் எப்போதும் மதிக்கிறேன். பிசிசிஐ என்னுடைய சமீப கருத்துக்களால் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிகிறது. மேலும் அந்த காரணத்தினால் என்னை அவர்கள் நீக்கியிருக்கலாம் அதை நான் முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement