பாராட்டுவது போல பாராட்டி தோனியை குத்திக்காட்டிய – சஞ்சய் மஞ்சரேக்கர்

Sanjay
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில் தற்போது நடப்பு 14-வது ஐபிஎல் தொடரில் முதலாவது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. சென்னை அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் தோனியின் பேட்டிங் மட்டும் சொதப்பலாக இருந்து வருவது சென்னை அணிக்கு பெரும் வருத்தத்தை அளித்திருந்தது.

dhoni 1

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி தேவையான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமின்றி இறுதி ஓவரில் பிரம்மாண்ட சிக்ஸர் ஒன்றினை அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் காரணமாக தற்போது தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது அந்த ஒரு சிக்சரை மட்டும் வைத்து தோனி பார்முக்கு வந்துவிட்டார் என்று நினைக்கவேண்டாம். அவரது பேட்டிங் பார்ம் மோசமாக இருந்தாலும் கேப்டன்சியில் அவரது பார்ம் மாஸ் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒரு சிக்ஸரை வைத்து தோனி தனது பழைய ஃபார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் நினைப்பது நல்லதல்ல.

dhoni 2
Dhoni CSK

அவரது பேட்டிங் மோசமாக இருந்தாலும் அவரது கேப்டன்சி சிறப்பாக இருக்கிறது. அது மட்டுமின்றி அவர் மோசமாகவே பேட்டிங் செய்தாலும் சென்னை அணியில் உள்ள மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவதால் அணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதே நேரத்தில் அவரது கேப்டன்சி ரெக்கார்டை முறியடிக்க எந்த ஒரு கேப்டனாலும் முடியாது.

Dhoni-1

ஒரு கேப்டனாக அதிக வெற்றி பெற்றவர் என்ற சாதனையை தோனி வைத்துள்ளார் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். இதில் ஒரு கேப்டனாக தோனி அவரை பாராட்டி இருந்தாலும் அவரது பேட்டிங் படுமோசம் என்று அவரை குத்திக் காண்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement