- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசில அஷ்வினையும் மட்டம் தட்டி பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர் – ரசிகர்கள் கோபம்

இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், அணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கிரிக்கெட் போட்களின் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இவரிடம் தற்போது ஒரு தனியார் விளையாட்டு இணையதளம் பேட்டி ஒன்றை எடுத்தது. அந்த பேட்டியில் பேசிய அவர், இந்திய அணியில் மட்டுமல்லாது உலகிலேயே மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழும் ரவிச்சந்திர அஸ்வினை, எப்போதும் ஆல் டைம் கிரேட் பௌலர் என்று நான் கருத மாட்டேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அஷ்வினைப் பற்றி பேசிய அவர்,

ரவிச்சந்திரன் அஷ்வினை குறிப்பிட்டு பேசும் பல முன்னாள் வீரர்கள் அவர் கிரிக்கெட்டின் ஆல் டைம் கிரேட் பௌலராக மாறுவார் என்று கூறுகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவரை அப்படி ஒருபோதும் நான் கருதவே மாட்டேன். இந்திய ஆடுகளங்களை தவிர்த்து வெளிநாட்டு ஆடுகளங்களில் அவர் ஒரு முறைகூட ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியது கிடையாது. இதன் காரணமாகத்தான் நான் அவரை ஆல் டைம் கிரேட் பௌலராக கருத மாட்டேன் என்று அவர் கூறினார்.

- Advertisement -

இதுவரை 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஷ்வின் 409 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமல்லாமல் 30 முறை ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார். இதில் SENA நாடுகள் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியுசிலாந்து மற்றுமர ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள மைதானங்களில் அஷ்வின் ஒரு முறைகூட ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பேட்டியில் மேலும் பேசிய மஞ்ச்ரேக்கர்,

கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இந்திய ஆடுகளங்களில் மட்டுமே அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். இந்திய ஆடுகளங்கள் அவருடைய சுழலுக்கு ஏற்றார்போல் இருப்பதால்தான் அவரால் இங்கு விக்கெட் வீழ்த்த முடிகிறது. இவரைப் போலவே ரவீந்திர ஜடேஜாவும் இந்திய ஆடுகளங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் உடையவர் என்று பேசிய அவர், கடந்த இங்கிலாந்து தொடரில் இந்திய ஆடுகளங்களில் அஷ்வினைவிட அக்சர் பட்டேல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்படி இருக்கையில் அவரை எப்படி ஆல் டைம் கிரேட் பௌலரென்று கூறுவது என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

எப்போதும் தனக்கு பிடித்த வீரரை பற்றி மட்டும் உயர்வாக பேசி, மற்ற வீரர்களை தாழ்த்திப் பேசும் வழக்கத்தை உடைய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இதற்கு முன்னரும் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் சில முக்கியமான வீரர்களைப் பற்றி பேசி ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகி உள்ளார். ஆனால் அதற்குப் பிறகு அந்த வீரர்களின் திறைமையக் கண்டு வியந்து தாம் பேசியது தவறு என்றும் ஒப்புக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஷ்வின் பற்றி இவர் கூறிய இந்த கருத்தினால் இந்திய ரசிகர்கள் இவர்மீது கோபத்துடன் சமூகவலைத்தளத்தில் அவரை வசைபாடி வருகின்றனர்.

- Advertisement -
Published by