
இந்திய அணியின் இளம் நட்சத்திர இடது கை ஆட்டக்காரரான இஷான் கிஷன் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது நான்காவது வீரராக களமிறங்கி 79 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 125 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்த அவர் அற்புதமான சதம் அடித்தது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
டி20 போட்டிகளில் கம்பேக் கொடுத்து உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இஷான் கிஷன் ஐ.பி.எல் போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் விராட் கோலி காயம் அடைந்ததன் காரணமாக அவருக்கு மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இடம் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வேளையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக் கொண்ட அவர் ஒருநாள் போட்டிகளிலும் இனி தொடர்ந்து நீடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இஷான் கிஷன் தற்போது ஒரு முழுமையான வீரராக மாறிவிட்டார் என்றும் 2027 உலக கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்கா விசா அவருக்கு கிடைத்துவிடும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : அடுத்த 2027 உலக கோப்பை தொடருக்கான விசாவை அவர் பெற்றுவிட்டார் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் தற்போது இஷான் கிஷன் விளையாடி வரும் விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது. டி20 போட்டிகளில் அற்புதமான பங்களிப்பை வழங்கிய அவர் ஒருநாள் போட்டிகளிலும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க : அடுத்த ஆண்டு 2027 ஐ.பி.எல் தொடரின் போட்டி அட்டவணையில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம் – விவரம் இதோ
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் கடந்த பிறகு அடுத்த 19 பந்துகளிலேயே அவர் சதத்தை நோக்கி முன்னேறி இருந்தார். அவருடைய இந்த சிறப்பான ஆட்டம் அவருக்கு அடுத்தடுத்த உயர்வுகளை பெற்று தரும் என்றும் கட்டாயம் அடுத்த உலககோப்பை தொடரில் அவர் இடம்பெறுவர் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.