ஜடேஜாவை தொடர்ந்து பாண்டியாவையும் சீண்டி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட சஞ்சய் மஞ்சரேக்கர் – விவரம் இதோ

Sanjay

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் கடைசியாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்தது , இதன்மூலம் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இதற்கிடையில் 4வது போட்டி முடிந்த வேளையில் கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஹர்திக் பாண்டியாவை நக்கலடித்த விஷயம் தற்போது ட்விட்டர் வலைதளத்தில் மிக வெகுவாக பேசப்பட்டு வருகிறது.

4வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் 8 பந்துகளை பிடித்து 11 ரன்களை மட்டுமே அளித்தார். இருந்தபோதிலும் பவுலிங்கில் மிக சிறப்பாக பங்களித்தார். 4 ஓவர்களை வீசி ஹர்திக் பாண்டியா வெறும் 16 ரன்களை மட்டுமே கொடுத்து கூடுதலாக இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை அனைவரும் பாராட்டி வந்த வேளையில் கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவு இட்டார்.

அதில் அவர் , ஆஸ்திரேலிய தொடரில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் திறன் வெளிவந்தது. தற்பொழுது இங்கிலாந்து தொடரில் ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் திறன் வெளிவந்துள்ளது. இவ்வாறு மறைமுகமாக ஆஸ்திரேலிய தொடரில் பேட்டிங் செய்த அளவுக்கு இங்கிலாந்து தொடரில் பேட்டிங் அவர் ஆடவில்லை என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நக்கலடித்து கூறியிருக்கிறார்.இதற்கு பல்வேறு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் அவரது பதிவின் கீழ் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் கடைசியாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்தை பொய்யாக்கும் வகையில் பேட்டிங்கில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என
17 பந்துகளில் 39 ரன்களை அடித்தார். மேலும் பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றி 34 ரன்களை கொடுத்தார்.

- Advertisement -

Pandya

பாண்டியாவின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு பின்னர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டேக் செய்து அவரது ரசிகர்கள் இப்போது என்ன கூறப் போகிறீர்கள் என்று கலாய்த்து வந்த வண்ணம் உள்ளனர்.