அவருக்கு தான் செய்வது தவறு என்று அறிவுரை வழங்கி இருக்கலாம். அதைவிடுத்து தூக்கியது தவறு – முன்னாள் வீரர் ஆதரவு

Sanjay
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பிசிசிஐ வர்ணனையாளர் குழுவில் ஒருவராக இருந்தார். உள்நாடு மற்றும் வெளிநாட்டு போட்டிகளில் எப்படியும் கண்டிப்பாக இவர் என்ன போட்டிகளிலும் வர்ணனை செய்வார்கள். ஆனால், இவரது வர்ணணை கடந்த சில வருடங்களாகவே ஒரு சார்பாகவும் ஒருசில வீரர்களைத் தாக்கிப் பேசும் விதமாகவும் இருந்தது.

Sanjay

- Advertisement -

உலக கோப்பை தொடர் நடைபெற்றபோது ஜடேஜா போன்ற துண்டு துக்கடா வீரர்களை அணியில் சேர்க்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இதற்கு ஜடேஜா அந்த தொடரின் அரையிறுதி போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்ததும் அவரே தான் கூறியது தவறு என்று ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் சக வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடன் அவர்களுடன் கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது வர்ணனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நாங்கள் கிரிக்கெட் விளையாடியவர்கள் பிங்க் நிற பந்து பற்றி எங்களுக்கு தெரியும் உங்களுக்கு என்ன கவலை என்பதுபோல் அவரை பேசியிருந்தார்.

Pink-ball

மேலும், இந்திய வீரர்களை மும்பை வீரர்கள் என்று கூறுவதும் ,மகராஷ்டிரா வீரர்கள் என்று கூறுவதும் அவர்களை தனிப்பட்ட முறையில் பேசுவதும் இவரது வாடிக்கையாக இருந்தது. இதுபோன்ற தொடர்ச்சியான செயல்களால் இதை பொறுத்துக் கொள்ளாத பிசிசிஐ தற்போது அவரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கியுள்ளது.

- Advertisement -

தற்போது அவருக்கு ஆதரவாக முன்னாள் வீரர் சந்திரசேகர் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது : ஒரு வர்ணனையாளராக அவர் பேசும் வார்த்தைகள் ஒரு சிலருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர் வேறு மாதிரி பேச முடியாது.

Sanjay

இந்த விஷயத்தில் அவருக்கு அறிவுரை கூறி இருக்கலாம். அவரை வர்ணனை பணியிலிருந்து நீக்கி இருக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் சந்திரசேகர். இவ்வளவு நாட்களில் சஞ்சய் மஞ்சரேக்கருக்காக ஆதரவாக பேசிய முதல் நபர் இவர்தான் வேறுயாரும் இந்த விடயம் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.

Advertisement