- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதுல ஜடேஜாவை விட சுந்தர் தான் பெஸ்ட்.. இந்தியா குல்தீப்பை தாராளமா கொண்டு வரலாம்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. அதனால் கடைசிப் போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்திய அணி தயாராக இருக்கிறது. அப்போட்டியிலாவது குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்பது பலருடைய கோரிக்கையாக இருக்கிறது.

ஏனெனில் இத்தொடரில் இந்திய அணி 11 சதங்கள் அடிக்கும் அளவுக்கு பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பந்து வீச்சுத் துறையில் இந்தியா 20 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக எடுக்க தடுமாறுகிறது. எனவே அதிரடியாக விளையாடும் இங்கிலாந்தை குல்தீப் யாதவ் நன்றாக பவுலிங் செய்து மடக்குவார் என்று பல முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

சுந்தர் – ஜடேஜா:

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவை விட பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தர் நல்ல பவுலர் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார். மேலும் பேட்டிங்கில் அடத்தும் ஜடேஜா பந்து வீச்சில் விக்கெட்டுகளை எடுக்கத் தடுமாறுவதாக தெரிவிக்கும் அவர் சுந்தர் 2 வேலைகளிலும் அசத்துவதாக பாராட்டியுள்ளார். அதனால் ஜடேஜாவை பேட்ஸ்மேனாக கருத்தில் கொண்டு குல்தீப்பை விளையாட வைக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது பற்றி மஞ்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “இப்போது நீங்கள் சுந்தரை முழுமையான ஆல் ரவுண்டராக பார்க்க வேண்டும். அதே போல ஜடேஜா அதிகம் பேட்டிங் ஆல் ரவுண்டராக முன்னேறுவதையும் பார்க்க வேண்டும். பந்து வீச்சு துறையில் ஜடேஜா எதிர்பார்க்கும் அளவுக்கு பங்காற்றுவதில்லை. ஆனால் சுந்தர் விக்கெட்டுகளையும் எடுக்கிறார். எனவே அவர் நீங்கள் விளையாடக்கூடிய முழுநேர ஆஃப் ஸ்பின்னராக இருப்பார்”

- Advertisement -

குல்தீப் விளையாட வாய்ப்பு:

“தற்போது இந்திய அணி எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை விளையாட வைப்பது பற்றி யோசிக்க மாட்டார்கள். அதன் காரணமாக ஒரு வழியாக கடைசிப் போட்டியில் அவர்கள் குல்தீப்பை விளையாட வைப்பது பற்றி சிந்திப்பார்கள். அதையே 4வது போட்டியில் ஜடேஜா – சுந்தர் பார்ட்னர்ஷிப் செய்துள்ளது. ரிஷப் பண்ட் இல்லாமலேயே இந்தியா அந்த இருவரை விளையாட வைக்க விரும்புவார்கள்”

இதையும் படிங்க: இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஹரி ப்ரூக் செஞ்சது அழுக்கான செயல்.. ஸ்டுவர்ட் ப்ராட் விமர்சனம்

“உண்மையிலேயே அவர்கள் பேட்டிங் துறையில் இந்தியாவுக்கு உதவி செய்கிறார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல இத்தொடரில் ஜடேஜாவை விட சுந்தர் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து கடைசி போட்டி ஜூன் 31ஆம் தேதி லண்டன் ஓவலில் துவங்குகிறது.

- Advertisement -