இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஹரி ப்ரூக் செஞ்சது அழுக்கான செயல்.. ஸ்டுவர்ட் ப்ராட் விமர்சனம்

Stuart Broad
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 4வது போட்டியில் போராடி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்த இந்தியா ட்ரா செய்தது. அதற்கு இரட்டை சதம் பார்ட்னர்ஷிப் அமைத்து முக்கிய பங்காற்றிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதத்தை அடித்து முக்கிய பங்காற்றினார்கள்.

முன்னதாக அந்தப் போட்டியின் கடைசி நாளில் இனிமேலும் இந்தியாவை வீழ்த்த முடியாது என்ற உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டியை முடித்துக் கொள்வதாக கை கொடுக்க வந்தார். ஆனால் சுந்தர் மற்றும் ஜடேஜாவின் சதத்தை தடுக்கும் நோக்கத்தில் வந்த அவரது அழைப்பை இந்திய கேப்டன் கில் ஏற்கவில்லை. அப்போது இங்கிலாந்து வீரர்கள் கெஞ்சாத குறையாக இந்திய வீரர்களிடம் கை கொடுக்குமாறு கேட்டனர்.

- Advertisement -

அழுக்கான செயல்:

அதற்கு ஜடேஜா கடைசி வரை சம்மதம் தெரிவிக்காததால் கடுப்பான பென் ஸ்டோக்ஸ் பகுதி நேர பவுலரான ஹரி ப்ரூக்கிடம் பந்தை வீசுமாறு சொன்னார். அதை ஏற்ற ப்ரூக் ஜடேஜா மற்றும் சுந்தருக்கு எதிராக அல்வா போன்ற ஃபுல் டாஸ் பந்துகளை வீசினார். அதாவது “உங்களுக்கு சதம் தானே வேண்டும், இதோ அடித்துக் கொள்ளுங்கள்” என்ற வகையில் வகையில் ப்ரூக் பவுலிங் செய்தார்.

மறுபுறம் அதைப் பயன்படுத்தி ஜடேஜா, சுந்தர் இருவருமே பவுண்டரிகளை அடித்து சதத்தை பதிவு செய்ததும் இந்தியா போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இந்நிலையில் அந்த சமயத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஹரி ப்ரூக் செய்த பவுலிங் மிகவும் அழுக்கைப் போன்ற மோசமானது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ப்ராட் விமர்சனம்:

“ஹரி ப்ரூக் பவுலிங் செய்ய வந்தார். அவர் முற்றிலும் அழுக்கைப் போன்ற ஆஃப் ஸ்பின் பந்துகளை வீசினார். அது மிகவும் சங்கடமான தருணமாக இருந்தது. பொதுவாக மிதவேகத்தில் வீசக்கூடிய நீங்கள் எப்படி திடீரென ஆஃப் ஸ்பின் பந்துகளை போட்டீர்கள்? ப்ரூக் எப்படி ஆஃப் ஸ்பின் பந்துகளைப் போட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் டான் லாரன்ஸ் ஆக்சனின் மோசமான வெர்சன் போல பவுலிங் செய்தார்”

இதையும் படிங்க: பர்ஸ்ட் மேட்ச்லயே என்ன 10 விக்கெட்டா எடுப்பாரு.. அவருக்கு அடுத்த போட்டியிலும் வாய்ப்பு தாங்க – கபில் தேவ் ஆதவு

“இந்திய வீரர்கள் சதத்தை அடிக்க முயற்சித்த போது, அவர் ஆட்டத்தை முடிக்க முயற்சி செய்தது போல் பவுலிங் செய்தார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து கடைசிப் போட்டி ஜூன் 31ஆம் தேதி துவங்க இருக்கிறது. லண்டன் ஓவலில் துவங்கும் அந்தப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணி தயாராகி வருகிறது.

Advertisement