- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதுதான் ரோஹித் சர்மாவுக்கு கடைசி ஐ.சி.சி தொடர்.. காரணத்தோடு விளக்கம் கொடுத்த – சஞ்சய் மஞ்சரேக்கர்

நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் அதன் பின்னர் ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் இழந்த இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியாக வேண்டும் என்கிற முனைப்புடன் தற்போது துபாயில் இந்திய அணி விளையாடி வருகிறது.

ரோஹித் சர்மாவிற்கு இதுவே கடைசி தொடர் :

இந்நிலையில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் தான் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கடைசி ஐசிசி தொடர் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

ஏற்கனவே 37 வயதை எட்டியுள்ள ரோகித் சர்மா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டார். எனவே அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சூழற்சியில் அவரால் முழுவதுமாக பங்கேற்க முடியாது. அதுபோக ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையுடன் அவர் டி20 வடிவ போட்டிகளில் இருந்தும் வெளியேறிவிட்டார்.

அதனால் அடுத்த 2026-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் அவர் விளையாடப் போவதில்லை என்பது உறுதி. அதேபோன்று 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவருக்கு 40 வயது ஆகிவிடும் என்பதினால் அதுவரை ரோகித் சர்மாவால் விளையாட முடியும் என்றால் அது இயலாத காரியம் என்று நான் சொல்வேன்.

- Advertisement -

எனவே என்னை பொருத்தவரை நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்தான் அவருக்கு கடைசி ஐசிசி தொடர் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார். மேலும் ரோகித் சர்மாவின் பயமற்ற ஆட்டம் குறித்து பேசிய அவர் கூறுகையில் : 2023 உலக கோப்பை தொடரின் போது ரோகித் சர்மா நினைத்திருந்தால் சில சதங்களை விளாசி இருக்கலாம்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? பயிற்சியின் போது ஏற்பட்ட சிக்கல் – என்ன நடந்தது?

ஆனால் அணிக்கு அதிரடியான துவக்கம் வேண்டும் என்பதற்காகவே அவர் அதிரடியான துவக்கத்தை அளித்து பின்னால் வரும் வீரர்களுக்கு எளிதாக ரன் சேர்க்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். அந்த வகையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபியிலும் பயமற்ற ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருவதால் இந்திய அணிக்கு இந்த தொடரை கைப்பற்ற நல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -