2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து சுப்மன் கில் நீக்கம் குறித்து தான் பலரும் பேசி வருகின்றனர். ஏனெனில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டி20 போட்டிகளுக்கான துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட அவர் டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணியின் துணை கேப்டனாக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சுப்மன் கில் நீக்கப்பட்டது சரிதான் : சஞ்சய் மஞ்சரேக்கர்
ஆனால் மோசமான பேட்டிங் காரணமாக சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் அவரை இப்படி அதிரடியாக நிர்வாகம் நீக்கியுள்ளது பலரது மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இருப்பினும் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அவர் நீக்கப்பட்டது சரிதான் என்று ஒரு சிலர் நிர்வாகத்தின் அந்த முடிவுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் தற்போதைக்கு டி20 அணியில் சுப்மன் கில் பொருந்த மாட்டார் என தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த 20 இன்னிங்ஸ்களாக அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவருடைய புள்ளி விவரமே அவர் மோசமான பேட்டிங் ஃபார்ம்மில் இருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது.
டி20 போட்டிகளை பொருத்தவரை அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடுவது அவசியம். இந்நிலையில் சுப்மன் கில் பார்மை மீட்டெடுப்பதற்காக பொறுமையாக விளையாடி அரைசதம் அடிக்கும் பட்சத்தில் நிச்சயம் அது ஆட்டத்தின் முடிவை பாதிக்கும்.
எனவே அவரை டி20 அணியில் இருந்து நீக்கியது என்னை பொருத்தவரை சரிதான். இந்திய டி20 அணி தற்போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் அதிகளவு ரன்களை சேர்த்தால் நிச்சயம் பெரிய ரன் குவிப்பை எட்ட முடியும் என்பதனாலே அந்த பாணியில் விளையாடுகிறது.
இதையும் படிங்க : சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் அசத்த வேண்டிய நேரம் வந்தாச்சு.. கப்புக்கு அவரோட பார்ம் முக்கியம் – விவரம் இதோ
தற்போதைக்கு டி20 அணியில் சுப்மன் கில் அவசியம் இல்லை என்றும் தோன்றுதாக சஞ்சய் மஞ்சரேக்கர் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்ட சுப்மன் கில் அடுத்ததாக பஞ்சாப் அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் விளையாட இருக்கிறார்.



