ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரானது அடுத்த மாதம் நிறைவடையுள்ள வேளையில் அடுத்ததாக நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
ஆஸ்திரேலியாவிற்கு அவரை கூட்டிட்டு போங்க :
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல அந்த தொடர் முக்கியமானதாக பார்க்கப்படும் வேளையில் இந்திய அணி அந்தத் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் நிச்சயம் சர்பராஸ் கானை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து சர்ஃபராஸ் கான் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முன்பு அதே போன்று தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடியிருந்தார். இந்திய மைதானங்களில் அற்புதமாக விளையாடும் அவர் கூடுதல் பவுன்ஸ் மற்றும் வேகம் ஆகியவற்றிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறார்.
எனவே ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்துவீச்சு சாதகமான மைதானங்களில் அவரால் பவுலர்களுக்கு தலைவலியை கொடுக்கும் வகையில் சிறப்பாக விளையாட முடியும். அவரிடம் பல்வேறு வகையான ஷாட்டுகளும் இருப்பதனால் அவரிடம் பேட்டிங் டெக்னிக் மிகவும் வலுவாக உள்ளது. எனவே நிச்சயம் அவரால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியை கொடுக்க முடியும்.
இதையும் படிங்க : அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தல தோனி விளையாடுவாரா? – காசி விஸ்வநாதன் அளித்த பதில்
என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் அனைத்து போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



