இந்தியா ஆட்டோ பைலட் ஆகிடுச்சு.. அந்த விஷயத்துல ராகுல் கேப்டன்ஷிப் தோனிக்கு சமம்.. மஞ்ரேக்கர் கருத்து

Sanjay Manjrekar 3
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் நடைபெற்ற டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையில் மழைக்கு மத்தியில் சமன் செய்து அசத்தியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை கே.எல். ராகுல் தலைமையில் 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை காண்பித்தது.

குறிப்பாக விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களுடன் அசத்திய இந்தியா 2018க்குப்பின் தென்னாபிரிக்க மண்ணில் 2வது முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனையும் படைத்தது. இந்நிலையில் யார் கேப்டனாக இருந்தாலும் வெற்றி பெறும் அளவுக்கு தற்போதைய இந்திய அணி ஆட்டோ பைலட் விமானம் போல் பறக்கும் திறமையை கொண்டிருப்பதாக சஞ்சய் மஞ்ரேக்கர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

தோனிக்கு நிகர்:
அத்துடன் எம்எஸ் தோனிக்கு நிகராக இத்தொடரில் டிஆர்எஸ் முடிவுகளை எடுப்பதில் ராகுல் கேப்டன்ஷிப் இருந்ததாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட் ஆட்டோ பைலட் போல செல்வதாக தெரிகிறது. சமீபத்தில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக வென்றார். தற்போது கேஎல் ராகுல் வென்றுள்ளார். ரோகித் சர்மாவும் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்”

“அந்த வகையில் கேப்டன்ஷிப் என்பது நன்றாக இருந்தாலும் போட்டியை மாற்றும் அளவுக்கு தற்போது இல்லை. மாறாக அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்படுவதால் வெற்றி கிடைக்கிறது. இப்போதெல்லாம் கே.எல் ராகுலை களத்தில் பார்க்கும் போது மிகவும் ரிலாக்ஸாக காணப்படுகிறார். இத்தொடரில் எதிர்பார்க்கப்பட்டது போலவே கேப்டன்ஷிப் செய்த அவர் அந்த பொறுப்பில் கச்சிதமாக செயல்பட்டார்”

- Advertisement -

“ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் கடந்த வருடம் தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் போட்டியிலும் 3 ஒருநாள் போட்டியிலும் இந்தியாவை தலைமை தாங்கினார். அந்த அனுபவத்தால் கே.எல் ராகுல் பெரிய தவறை செய்து விடுவார் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. டிஆர்எஸ் எடுப்பதில் அவர் வல்லுனராக மாறியுள்ளார். குறிப்பாக ரிவ்யூ எடுப்பதில் அவருடைய நுணுக்கங்கள் எம்எஸ் தோனிக்கு நிகராக இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: 4 வருஷம் ஆனாலும்.. இனிமேலாவது அவருக்கு ரெகுலர் சான்ஸ் கொடுங்க.. தேர்வுக்குழுவை கம்பீர் கோரிக்கை

இதை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. டிசம்பர் 26ம் தேதி துவங்கும் அத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் கொண்ட இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement