அவரோட பேட்டிங்கில் எந்தவித குறையுமே கண்டுபிடிக்க முடியல. அவர் வேறலெவல் பிளேயர் – சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டு

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக சூரியகுமார் யாதவ் களமிறங்கி வருவது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏனெனில் நான்காவது இடத்தில் களமிறங்கி அற்புதமாக செயல்படும் சூரியகுமார் யாதவை துவக்க வீரராக களம் இறக்குவது தவறு என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர்.

Sky-1

- Advertisement -

ஆனால் ரோகித் சர்மா தொடர்ச்சியாக அவரை துவக்க வீரராக இந்த தொடரில் களமிறக்கி வருகிறார். முதல் இரண்டு போட்டியில் பெரிய அளவில் ரன்களை குவிக்காத சூரியகுமார் யாதவ் மூன்றாவது போட்டியில் 44 பந்துகளை சந்தித்து 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். அதன் காரணமாக மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அவரே துவக்க வீரராகவே களமிறங்குவார் என்று தெரிகிறது.

என்னதான் சூரியகுமார் யாதவ் துவக்க வீரராக சிறப்பாக விளையாடி வந்தாலும் நான்காவது இடத்தில் களமிறங்குவது தான் சரியான முடிவு என்று ஒரு பேச்சும் சமூக வலைதளத்தில் இருந்து வருகிறது. அதே போன்று தனது கிரிக்கெட் கரியரை மிக இளம் வயதில் அவர் ஆரம்பித்தாலும் அவரது 31-வது வயதில் கடந்த ஆண்டுதான் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அசத்தி வரும் அவர் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முதன்மை வீரராக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான சில மாதங்களிலேயே இவர் தற்போது தரவரிசையில் இரண்டாவது இடத்தையும் எட்டிப் பிடித்துள்ளது அவரது திறனை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் சூரியகுமார் யாதவ் செயல்படும் விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சூரியகுமார் யாதவியின் வளர்ச்சி இன்றி அமையாத ஒன்றாக உள்ளது. ஏனெனில் சில வருடங்களுக்கு முன்பு வரை பைன் லெக் திசையில் பிலிக் செய்யும் திறன் அவர்களுடைய தனித்துவமான அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது மைதானத்தின் முழு பகுதிகளுக்கும் அவரால் வெவ்வேறு ஷாட்டுகளை பிரயோகிக்க முடிகிறது.

இதையும் படிங்க : IND vs WI : கடைசி 2 போட்டிக்கான அணியில் 2 வீரர்கள் வெளியேற்றம். 2 பேருக்கு வாய்ப்பு – விவரம் இதோ

சூரியகுமார் யாதவ்க்கு எதிராக நல்ல வேகம், லைன் மற்றும் லைன்த்தில் எப்படி பவுலர்கள் பந்து வீசினாலும் அவரை பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த அளவிற்கு சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக சஞ்சய் மஞ்சுரக்கர் புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement