IND vs WI : கடைசி 2 போட்டிக்கான அணியில் 2 வீரர்கள் வெளியேற்றம். 2 பேருக்கு வாய்ப்பு – விவரம் இதோ

IND vs WI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த மூன்று டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் வேளையில் நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

Thomas

- Advertisement -

இதற்காக இரு அணி வீரர்களும் அங்கு சென்றடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், நாளைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இதன் காரணமாக நாளைய நான்காவது டி20 போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் நாளைய நான்காவது டி20 போட்டியில் நிச்சயம் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று உறுதியாக கூறப்பட்டுள்ளது.

Avesh Khan

அந்த வகையில் இந்த தொடரில் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ஷ்ரேயாஸ் ஐயரும், பந்துவீச்சில் சொதப்பி வரும் ஆவேஷ் கானும் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதோடு அவர்கள் இருவருக்கும் பதிலாக இந்த தொடரில் இதுவரை விளையாடாத 2 வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த தொடரில் இதுவரை விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதாவிற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : காமன்வெல்த் 2022 : ரசிகர்களுக்காக இந்தியாவின் அரையிறுதி போட்டியில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் இதோ

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement