காமன்வெல்த் 2022 : ரசிகர்களுக்காக இந்தியாவின் அரையிறுதி போட்டியில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் இதோ

Commonwealth Games Smiriti Mandhana Shafali Verma
- Advertisement -

கால்பந்துக்கு பிறகு உலகின் மிகப்பெரிய 2-வது விளையாட்டாக கிரிக்கெட் கருதப்பட்டாலும் ஒலிம்பிக் போன்ற கௌரவமிக்க விளையாட்டு போட்டிகளில் பல்வேறு காரணங்களுக்காக ஒரு கட்டத்திற்குப் பின் இடம் பெறாமலேயே இருந்து வருகிறது. குறிப்பாக ஒலிம்பிக்க்கு நிகராக போற்றப்படும் காமன்வெல்த் போட்டிகளில் கடைசியாக கடந்த 1998இல் ஆடவர் கிரிக்கெட் விளையாடப்பட்டு அதில் ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியா தங்கப் பதக்கத்தை வென்றதோடு கைவிடப்பட்டது.

இருப்பினும் ஐசிசியின் தொடர் முயற்சியால் 24 வருடங்கள் கழித்து இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் 20 ஓவர் போட்டிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் குரூப் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதி வந்த லீக் சுற்று போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன.

- Advertisement -

கடந்த ஜூலை 29-ஆம் தேதியன்று இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் துவங்கிய இந்த காமன்வெல்த் கிரிக்கெட் லீக் போட்டிகளில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்திருந்த ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்தியா தனது முதல் லீக் போட்டியில் வலுவான உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வியடைந்தது. அதனால் வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் களமிறங்கிய 2வது போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது.

அரையிறுதியில் இந்தியா:
அத்துடன் பார்படாஸ் அணிக்கு எதிரான தனது கடைசி வாழ்வா – சாவா போட்டியிலும் 100 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா குரூப் ஏ பிரிவுக்கான புள்ளிப் பட்டியலில் பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 1 தோல்வியையும் பதிவு செய்து 2-வது இடத்தை பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல் பங்கேற்ற 3 போட்டிகளிலும் தோல்வியே அடையாமல் ஹாட்ரிக் வெற்றி பெற்ற உலக சாம்பியன் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

மேலும் குரூப் பி பிரிவில் தங்களது சொந்த மண்ணில் அசத்திய இங்கிலாந்து பங்கேற்ற 3 போட்டிகளிலும் 3 வெற்றிகளை பதிவு செய்து முதலிடமும் நியூசிலாந்து தன்னுடைய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து 2-வது இடமும் பிடித்து அரையிறுதி சுற்றுக்கு வந்துள்ளன. இதையடுத்து இந்த காமன்வெல்த் போட்டிகளின் மாபெரும் அரையிறுதி நாக்-அவுட் சுற்று போட்டிகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதியான நாளை இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற உள்ளது.

மிகப்பெரிய மாற்றம்:
அதில் குரூப் ஏ பிரிவில் 2வது இடம் பிடித்த இந்தியாவை குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து 2வது அரையிறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது. அதேபோல் குரூப் பி பிரிவில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தை குரூப் ஏ பிரிவின் முதல் இடம் பிடித்த ஆஸ்திரேலியா முதல் அரையிறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த முக்கியமான போட்டிகளில் வெல்வதற்காக அனைத்து அணி வீராங்கனைகளும் தற்போது பர்மிங்காமில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இந்த அரையிறுதி சுற்றில் இந்தியா பங்கேற்கும் அரையிறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடை பெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

ஆனால் அந்த சமயத்தில் இரவு நேரம் என்பதால் பெரும்பாலான இந்திய ரசிகர்கள் போட்டியை பார்க்க முடியாது என்ற கருத்தில் கொண்ட ஒளிபரப்பு நிர்வாகம் அந்த போட்டியை மதியத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை வைத்தது. அதை ஏற்றுக் கொண்டுள்ள காமன்வெல்த் நிர்வாகம் இந்தியா பங்கேற்கும் அரையிறுதிப் போட்டியை மதியம் 3.30 மணிக்கு மாற்றியுள்ளது. அதாவது 2-வது அரையிறுதிப் போட்டியை முதல் அரை இறுதிப் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப் போட்டியாக 2வதாக மாற்றப்பட்டு இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

தங்கம் வெல்லுமா:
இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில் அந்த போட்டியில் வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வெல்வதற்காக இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உங்களோட ஐடியா கிரிக்கெட்டை அழித்துவிடும், ஒன்டே மிகவும் முக்கியம் – ரவி சாஸ்திரிக்கு முன்னாள் வீரர் பதிலடி

ஒருவேளை அதில் தோற்கும் பட்சத்தில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டியில் தோற்கும் அணியுடன் இந்தியா மீண்டும் ஒரு வாய்ப்பில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement