உங்களோட ஐடியா கிரிக்கெட்டை அழித்துவிடும், ஒன்டே மிகவும் முக்கியம் – ரவி சாஸ்திரிக்கு முன்னாள் வீரர் பதிலடி

shastri
Advertisement

நவீன யுகத்தின் வளர்ச்சிக்கேற்ப கிரிக்கெட்டில் உருவாக்கப்பட்ட டி20 கிரிக்கெட் அதுவரை நடைபெற்று வந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை பின்னுக்கு தள்ளி ரசிகர்கள் விரும்பும் உலகின் நம்பர் ஒன் போட்டிகளாக அவதரித்துள்ளது. அதனால் நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் முழுமையாக நடைபெற்றாலும் முடிவுகளை கொடுக்காமல் டிராவில் முடிவடைந்ததால் பெரும்பாலான ரசிகர்கள் அதை விரும்புவதில்லை. அப்படி அழிவின் பிடியில் சிக்கிய டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற 50 மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டை போலவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் புதிய உலக கோப்பையை கடந்த 2019இல் ஐசிசி அறிமுகப்படுத்தியது.

Jasprit Bumrah Team India

அதனால் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பை கிடையாது லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தேவையான புள்ளிகளைப் பெற்று இறுதிப் போட்டியில் வென்றால் தான் கோப்பை என்ற நிலைமை உருவாகியுள்ளது. அதன் காரணமாக சமீபத்திய வருடங்களில் ட்ரா செய்யாமல் வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மை அனைத்து அணிகளிடமும் உருவாகியுள்ளதால் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் உயிர்த்தெழுந்துள்ளது. மேலும் என்னதான் 50 பந்துகளில் 100 ரன்கள் அடித்தாலும் மன தைரியத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி 300 பந்துகளை எதிர்கொண்டு 100 ரன்களை அடிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டே மகத்தானது என்று ரசிகர்களும் புரிந்து கொண்டு விரும்பிப் பார்க்கத் துவங்கியுள்ளனர்.

- Advertisement -

சாஸ்திரியின் ஆலோசனை:
ஆனாலும் கூட பலவீனமான அணிகளால் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் என்பது முன்பைப் போலவே இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக இந்தியா – வங்கதேசம், ஆஸ்திரேலியா – இலங்கை போன்ற அணிகள் மோதும் போது அதில் ஒரு அணி பலவீனமாக இருப்பதால் தாமாகவே அப்போட்டியில் தரம் குறைந்து விடுகிறது. அதனால் தரமற்ற போட்டிகளை யாருமே பார்க்க விரும்ப மாட்டார்கள் என தெரிவித்த முன்னாள் இந்திய ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உலகின் டாப் 6 அணிகள் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால் தரமும் ஆர்வமும் அதிகரிக்கும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Shastri

தரமில்லாமல் நிறைய போட்டிகள் நடை பெறுவதை விட தரத்துடன் குறைவான போட்டிகள் நடை பெற்றால் அதற்கு மவுசு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கு அதுதான் சரியான வழி என்று கூறினார். மேலும் அப்படி செய்வதால் அந்த தரமற்ற தொடர்கள் தாமாக நிற்கும்போது அந்த நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நிறைய அணிகளை ஈடுபடுத்தலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

கிரிக்கெட்டை அழித்துவிடும்:
இந்நிலையில் ரவி சாஸ்திரியின் இந்த ஆலோசனைகள் உலக கிரிக்கெட்டை மேலும் தடுமாற செய்யுமே தவிர முன்னேற்றாது என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலடியாக கொடுத்துள்ளார். அவரின் கருத்துக்களை பற்றி அலசிய அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட் குறிப்பிட்ட அளவில் மட்டும் நடக்கலாம். ஆனால் அதில் முதல் 6 அணிகள் மட்டும் விளையாடினால் உலக கிரிக்கெட் தடுமாறும் என்று நான் உணர்கிறேன். குறிப்பாக கிரிக்கெட்டின் முக்கியமான வடிவம் என நாம் கருதும் டெஸ்ட் போட்டிகள் சிக்கலை சந்திக்கும்”

Chopra

“மேலும் அந்த டாப் 6 நாடுகளை யார் தேர்வு செய்வது? தரவரிசையை பொருத்தா? அப்படியானால் எஞ்சிய அணிகள் என்ன செய்யும். முதல் 6 அணிகள் மட்டும் விளையாடினால் அதில் இடம் பிடிக்க கடைசி 6 அணிகள் போராடி மேல் நோக்கி வரும் என்று அவர் (சாஸ்திரி) கூறியிருந்தார். ஆனால் அந்த கடைசி 6 அணிகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட போவதில்லையே பின்பு எப்படி மேல் நோக்கி வருவார்கள்” என்று கூறினார்.

- Advertisement -

ஒன்டே தேவையில்லை:
அதுபோக சமீப காலங்களில் ஒருநாள் கிரிக்கெட் அழிந்து வருவதாக கூறும் ஒரு தரப்பினர் அதை மொத்தமாக நிறுத்தி விடலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெற ஒருநாள் போட்டிகள் அவசியமென்று தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா மேலும் பேசியது பின்வருமாறு.

“நீங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாமல் நேரடியாக உலக கோப்பையில் மட்டும் விளையாடினால் எதற்காக அதை விளையாட வேண்டும்? எதற்காக அதை தொடர வேண்டும்? அதை விட்டு விடுவது நல்லது. 2 உலக கோப்பைகளுக்கு இடைவெளியில் நீங்கள் கிரிக்கெட் விளையாடும் வடிவத்தில் உலக கோப்பை இருக்க வேண்டும். நிறைய பேர் கால்பந்தை கிரிக்கெட்டுடன் ஒப்பிடுகிறார்கள்.

இதையும் படிங்க : தமிழக ஆளுநரின் கையால் மிகப்பெரிய கௌரவத்தை பெற்ற சுரேஷ் ரெய்னா – சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி

ஆனால் கால்பந்தில் 3 வகையான ஆட்டங்கள் கிடையாது. மேலும் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட மாட்டீர்கள் ஆனால் 50 ஓவர் உலகக் கோப்பை மட்டும் முக்கியம் என்று நீங்கள் கூறினால் நான் இல்லை என்று கூறுவேன்” எனக்கூறினார்.

Advertisement