இந்த வருட ஐ.பி.எல் தொடரில் பேட்டிங்கில் பலம்வாய்ந்த அணி இதுதான் – சஞ்சய் மஞ்சரேக்கர் கணிப்பு

Sanjay

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக பலமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது பல சிக்கல்களை கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து விட்டன.

ipl

மேலும் தற்போது பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் ? எந்த அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்தது ? எந்த அணி பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணி ? சிறப்பாக விளையாடி அனைத்து அணைகளுக்கும் கடுமையான போராட்டத்தை கொடுக்கும் அணி எது ? என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை பல முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : என்னை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல அனுபவம் மிக்க வீரர்களை கொண்டது. அதுவே அந்த அணிக்கு பலமாகவும் இருக்கிறது.

Watson-2

குறிப்பாக தோனி, வாட்சன், டூப்ளெஸ்ஸிஸ், ராயுடு என அனுபவம் மிக்க வீரர்கள் பேட்டிங் வரிசையில் இருப்பதால் சென்னை அணி தொடரில் அதிக பலம் வாய்ந்த அணியாக நான் கருதுகிறேன். ஏனெனில் ரெய்னாவின் இடத்தில் தோனி இறங்கினால் சிஎஸ்கே அணி மேலும் வலுப்படும். அதுமட்டுமன்றி கீழ் வரிசையில் ஜடேஜா, பிராவோ, சாகர் என பேட்டிங் தெரிந்த ஆல்ரவுண்டர்கள் ரன் குவிக்கும் ஈடுபாடு உடையவர்கள்.

- Advertisement -

இதனால் இத்தொடரில் பேட்டிங் வரிசையில் மற்ற அணிகளை பொருத்தவரை சிஎஸ்கே பலம் வாய்ந்த அணியாக கருவதாக கூறியிருந்தார். மேலும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஐபிஎல் அணிகளின் பேட்டிங் வரிசை படுத்திய அவர் வெளியிட்டிருந்த பதிவில் சென்னை அணி முதலிடத்திலும், ராஜஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.