பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தப் போட்டியில் வென்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்லும் பயணத்தை இந்தியா வெற்றியுடன் துவக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக அந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக விளையாடுவதற்கு பிரகாச வாய்ப்புள்ளது.
அதற்கு அடுத்தபடியாக மைதானம் மற்றும் சூழ்நிலையை கொடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவது சிறந்த தேர்வாக இருக்கும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
அஸ்வினுக்கு பதிலாக:
“இந்திய கிரிக்கெட்டில் ஸ்பின்னர்களை நம்பும் வழக்கம் இருக்கிறது. இந்தியா 3 ஸ்பின்னர்களுடன் விளையாடிய 1977 பெர்த் டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கியது. சமீபத்தில் 2008ஆம் ஆண்டு சேவாக், அனில் கும்ப்ளே ஆகியோர் விளையாடினார்கள். அதில் ஆடம் கில்கிறிஸ்ட் உட்பட சேவாக் சில முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாஷிங்டன் சுந்தர் கடந்த நியூசிலாந்து தொடரில் தரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்”
“எனவே கொஞ்சம் பேட்டிங் திறமையும் கொண்ட அவரை அணியிலிருந்து நீக்குவதற்கு யாருக்கு இதயம் இருக்கும்? சொல்லப்போனால் அவரை விளையாட வைப்பதற்காக நான் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தியாகம் செய்வேன். கடந்த காலங்களைப் பற்றி பார்க்காமல் தற்போதைய சூழ்நிலையைப் பார்த்து நம்முடைய 11 பேர் கொண்ட அணியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி நீங்கள் சில குறிப்பிட்ட வீரர்களை தேர்ந்தெடுக்கலாம்”
சுந்தர் வாய்ப்பு:
“சமீபத்திய நியூசிலாந்து தொடரில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக விளையாடினார். அதே போல ஆஸ்திரேலியாவில் கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும் சூழ்நிலையில் விளையாடுவதற்கு வாஷிங்டன் சுந்தர் மிகவும் சிறந்த வீரர். அவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் பேட்டிங்கில் விளையாடுவதற்கு தேவையான அனுபவத்தையும் கொண்டுள்ளார்”
இதையும் படிங்க: வெளில பேசுறவங்கள பத்தி யோசிக்காதீங்க.. இதை மட்டும் பண்ணுங்க போதும் – கே.எல் ராகுலுக்கு மைக் ஹஸ்ஸி அட்வைஸ்
“எனவே அவரை எப்படி உங்களால் அணியில் இருந்து கழற்றி விட முடியும். பெர்த் மைதானத்தின் வரலாற்றை பொறுத்து கண்டிப்பாக அவர் இந்திய அணியில் விளையாட வேண்டும்” என்று கூறினார். முதல் போட்டிக்கான சஞ்சய் மஞ்ரேக்கர் பிளேயிங் லெவன்: அபிமன்யு ஈஸ்வரன், யசஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல், விராட் கோலி, ரிஷப் பண்ட் (கீப்பர்), கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), முகமத் சிராஜ், ஆகாஷ் தீப்



