வெளில பேசுறவங்கள பத்தி யோசிக்காதீங்க.. இதை மட்டும் பண்ணுங்க போதும் – கே.எல் ராகுலுக்கு மைக் ஹஸ்ஸி அட்வைஸ்

Hussey-and-Rahul
- Advertisement -

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று பயிற்சியினை மேற்கொண்டு வரும் வேளையில் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் அதன் பின்னர் இரண்டாவது போட்டியில் இருந்து இந்திய அணியுடன் இணைவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

கே.எல் ராகுலுக்கு மைக்கல் ஹசி அட்வைஸ் :

இதன் காரணமாக முதல் போட்டியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அதனால் ரோகித் சர்மாவிற்கு பதிலாக மாற்று துவக்க வீரராக களமிறங்கங்கப்போகும் வீரர் யார்? என்பது குறித்த கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வந்தது. இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரரான கே.எல் ராகுல் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் இந்திய ஏ அணி சார்பாக கே.எல் ராகுல் விளையாடியிருந்த வேளையில் அந்த போட்டிகள் அனைத்திலுமே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வந்தார். அது மட்டுமின்றி சமீப காலமாகவே அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருப்பதினால் கே.எல் ராகுல் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

மேலும் ராகுலை போன்ற ஒரு தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் வேறொரு அணியில் இருந்தால் நிச்சயம் வெளியேற்றப்படுவார் என்றும் பல கருத்துக்கள் உலாவி வருகின்றன. இந்நிலையில் வெளியிலிருந்து யார் கூறும் விமர்சனங்களையும் பற்றி கவலை கொள்ளாமல் தன் மீது நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக்கல் ஹசி அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்களில் கே.எல் ராகுலும் ஒருவர். அவர் மீது நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன ஆனாலும் தனது திறமை மீதும், பேட்டிங் மீதும் நம்பிக்கை வைத்து அவர் விளையாடினால் நிச்சயம் அவர் கிளாஸ் என்ன என்பது அனைவருக்கும் புரியும். வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் தனது திறமையை வெளிப்படுத்த கே.எல் ராகுல் முயற்சிக்க வேண்டும்.

இதையும் படிங்க : அஸ்வின் இல்லை.. ரோஹித் இல்லாமல் முதல் ஆஸி போட்டிக்கான சஞ்சய் மஞ்ரேக்கர் இந்திய பிளேயிங் லெவன்

அப்படி முயற்சிக்கும் பட்சத்தில் அவரால் இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். நிச்சயம் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரன்களை குவிப்பார் என்கிற நம்பிக்கை என்னிடம் உள்ளது என மைக்கல் ஹஸி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement