ரூட் மாதிரி.. விராட் கஷ்டப்படாம அதை விட்டு கொடுத்ததுக்கு மொத்தமா ரிட்டையராகிருக்கலாம்.. மஞ்ரேக்கர் பேட்டி

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றார். 2019க்குப்பின் தடுமாற்றமாக விளையாடிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார். மறுபுறம் 2021 வரை தடுமாறி வந்த இங்கிலாந்தின் ஜோ ரூட் கடந்த 3 வருடங்களில் விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சின் டெண்டுல்கருக்கு பின் அதிக ரன்கள் குவித்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் அதைப் பார்ப்பது தமக்கு வேதனையளிப்பதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். மேலும் கடினமாக உழைத்து தனது டெஸ்ட் ஆட்டத்தை சரி செய்யாத விராட் கோலி எளிதான ஒருநாள் போட்டிகளில் விளையாட தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதற்கு பேசாமல் அவர் மொத்தமாக ஓய்வு பெற்றிருக்கலாம் என்று விமர்சிக்கும் மஞ்ரேக்கர் இது பற்றி இன்ஸ்டாகிராமில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஈஸியா விட்டுக் கொடுத்துட்டிங்களே:

“ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சங்களை தொடும் போது என்னுடைய மனம் விராட் கோலியிடம் செல்கிறது. ஓய்வு பெறுவதற்கு முன் அவர் துரதிஷ்டவசமாக 5 வருடங்கள் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறினார். இருப்பினும் அதற்கான பிரச்சினைகளை சரி செய்ய அவர் தன்னுடைய இதயத்தையும் உயிரையும் போடவில்லை. அதனாலேயே கடைசி 5 வருடங்களில் அவர் 35 என்ற சராசரியைக் கொண்டிருந்தார்”

“அது ரூட், ஸ்மித், வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுக்கென்று பெயரை உருவாக்கும் போது என்னை சோகமாக்குகிறது. அதற்கு விராட் கோலி ஒட்டுமொத்தமாக அனைத்து கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்று சென்றிருந்தால் கூட பரவாயில்லை என்றிருக்கும். ஆனால் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட தேர்ந்தெடுத்துள்ளது என்னை இன்னும் ஏமாற்றமடைய வைக்கிறது. ஏனெனில் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு இருப்பதிலேயே ஒருநாள் போட்டிகள் தான் மிகவும் எளிதான ஃபார்மட்டாகும்”

- Advertisement -

மஞ்ரேக்கர் ஆதங்கம்:

“உண்மையிலேயே டெஸ்ட் போட்டிகள் தான் உங்களை சோதிக்கக்கூடிய முதல் ஃபார்மட்டாகும். டி20 கிரிக்கெட்டில் வித்தியாசமான சவால்கள் இருக்கும். விராட் கோலி மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். அதனால் ஒருவேளை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடி போராடினால் பழைய ஃபார்முக்கு வர முடியும் என்பது உங்களுக்குத் தெரியும்”

இதையும் படிங்க: 518 ரன்ஸ்.. டான் பிராட்மேனின் உலக சாதனையை உடைத்த ஸ்மித்.. இங்கிலாந்துக்கு எதிராக 2 சாதனை

“ஒருவேளை சுமாராக விளையாடி இந்திய அணியில் கழற்றி விடப்பட்டிருந்தால் கூட அவர் உள்ளூர் அல்லது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி கம்பேக் கொடுக்க முயற்சிக்கலாம். அது என்னை உண்மையாக மகிழ்ச்சியடைய வைத்திருக்கும். மொத்தத்தில் விராட் கோலி எடுத்தது அவருடைய முடிவு. ஆனால் ரூட், ஸ்மித், வில்லியம்சன் ஆகியோர் சதம் அல்லது ரன்கள் அடிக்கும் போதெல்லாம் என்னுடைய மனம் விராட் கோலியிடம் செல்கிறது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் கோலி அதிக முக்கியத்துவம் கொடுத்தார் அல்லவா?” என்று கூறியுள்ளார்.

Advertisement