வருண் சக்ரவர்த்தி அதுக்கு பயப்படாம தைரியமா செய்றாரு.. அபார கம்பேக் பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டு

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த ஊரில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியாவை 3வது போட்டியில் இங்கிலாந்து தோற்கடித்தது. ராஜ்கோட் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 171/9 ரன்கள் குவித்த இங்கிலாந்து பின்னர் இந்தியாவை 145/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றி பெற்றது.

அதனால் அந்தப் போட்டியில் 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் போராட்டம் வீணானது. கடந்த வங்கதேச தொடரில் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடத் துவங்கிய அவர் கம்பேக் கொடுத்தது முதல் 10 போட்டிகளில் 27 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அந்தப் பத்து போட்டிகளில் 2 முறை அவர் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

அபார கம்பேக்:

அதன் வாயிலாக 10 தொடர்ச்சியான சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் அடிப்பார்கள் என்பதற்காக பயப்படாமல் தைரியமாக பவுலிங் செய்வதே வருண் சக்கரவர்த்தியின் இந்த வெற்றிக்கு காரணம் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“அவர் 5 விக்கெட்டுகளை அடிக்கடி எடுக்கிறார். இரண்டாவது முறையாக டி20 கிரிக்கெட்டில் அவர் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளது வேடிக்கையானது. அதற்கான காரணம் பற்றி நான் ஏற்கனவே பேசியுள்ளேன். அவர் பந்தை பிட்ச்சில் முன்னே பிட்ச் செய்கிறார். இன்றும் அவர் அதை செய்வதற்கு பயப்படவில்லை. அவ்வாறு அவர் வீசிய பந்தை ஜேமி ஸ்மித் சிக்ஸ் அடித்தார்”

- Advertisement -

தைரியமான வருண்:

“ஆனால் பின்னர் கொஞ்சம் ஷார்ட்டாக வீசிய அவர் எப்போதும் பேட்ஸ்மேன்கள் தன்னை அடிக்கும் வகையில் சவாலுடன் பவுலிங் செய்கிறார். தைரியம் உள்ளவர்களுக்கே அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அந்த வகையில் வருண் ரிஸ்க் எடுப்பதற்கு தயாராக இருக்கிறார். அதனாலேயே அவருக்கு விக்கெட்டுகளும் கிடைக்கின்றன”

இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து 4வது டி20 நடைபெறும் புனே மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“அவருடைய பந்துகள் நேராக செல்கின்றன. பந்தை ரிலீஸ் செய்வதிலும் அவர் சில யுக்திகளை பின்பற்றுகிறார். அதனால் அவரை தாண்டி அதிரடியாக அடிப்பது மிகவும் கடினமாக இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தத் தொடரின் நான்காவது போட்டி ஜனவரி 31ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற இந்திய அணி தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement