- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வேணாம்ன்னு விமர்சித்த எனக்கே பதிலடி கொடுத்த.. கில் இனிமேல் அதுல தோற்க மாட்டாரு.. மஞ்ரேக்கர் பாராட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் உள்ள ஹண்டிங்லே மைதானத்தில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாளில் 359/3 ரன்கள் குவித்து அசத்தி வருகிறது.

இந்திய அணிக்கு 92 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் 42 ரன்கள் குவித்தார். அறிமுக வீரர் சாய் சுந்தரரசன் டக் அவுட்டானாலும் மறுபுறம் இங்கிலாந்தை அபாரமாக எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 100 ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய சுப்மன் கில் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியிலேயே சதத்தை அடித்து 127* ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

பதிலடி கொடுத்துட்டாரு:

அவருடன் 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய ரிஷப் பண்ட் பொறுப்புடன் 65* ரன்களை குவித்து இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்து வருகிறார். முன்னதாக வெளிநாட்டு மண்ணில் பெரிய ரன்கள் குவிக்காத சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு தம்முடைய முதல் போட்டியிலேயே சதத்தை அடித்துள்ள சுப்மன் கில் தம்மைப் போன்ற விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார்.

மேலும் கேப்டன்ஷிப் பொறுப்பில் சுப்மன் கில் தொடர்ந்து அசத்துவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு நான் எதிராக இருந்தேன். இங்கே நேர்மையுடன் பேச வேண்டும். வருங்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் நிகழ்காலத்தைப் பார்த்தால் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக சிறந்த ஆப்ஷனாக இருந்தார்”

- Advertisement -

மஞ்ரேக்கர் பாராட்டு:

“எனவே கில்லை கேப்டனாக நியமித்தது சரியான முடிவு என்று நான் நினைக்கவில்லை. ஆனால் கில் கேப்டனாக தோல்வியைச் சந்திப்பாரா? என்று கேட்டால் இல்லை. கேப்டனாக இருக்க வேண்டும் என்ற கவலையை அவர் சுமக்க மாட்டார் என்பது நமக்குத் தெரியும். என்னுடைய ஒரே கேள்வி என்னவெனில் வெளிநாட்டில் அவர் இன்னும் வளராத கிரிக்கெட்டராகவே இருக்கிறார்”

இதையும் படிங்க: 2002 மாதிரி இளம் இந்தியா ஜெய்க்கும்.. இம்முறை 3 இல்ல 4வது சதம் வரும்.. சச்சின், கங்குலி கணிப்பு

“அப்படிப்பட்ட சூழ்நிலையில் கேப்டன்ஷிப் பொறுப்பு வெளிநாட்டில் அவர் மீது தேவையற்ற அழுத்தத்தை உண்டாக்கலாம் என்பதே என்னுடைய கேள்வியாக இருந்தது. ஆனால் இன்று அவர் வெளிநாட்டு மண்ணில் பெரிய சதத்தை அடிப்பதற்கு தடையாக இருந்த 3 டெக்னிக்கல் தவறுகளையும் உடைத்தெறிந்தார். பிட்ச் நன்றாக இருந்தது, பவுலிங் நட்பாக இருந்தது. அந்த சூழ்நிலைகளில் தமது டெக்னிக்கல் தவறுகளை உடைத்தெறிந்த சுப்மன் கில் பொறுமையுடன் மற்ற விஷயங்களை செய்து காண்பித்துள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -