இதுக்காக அகர்கரை பாராட்ட ஒன்னுமில்ல.. இங்கிலாந்தில் பாத்து செஞ்ச தப்பை திருத்திருக்காரு.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் 2023 அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடியதால் ஆரம்பத்திலேயே கழற்றி விடப்பட்டார். அப்போது சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா புதிய ஓப்பனிங் ஜோடியாக களமிறக்கப்பட்டார்கள்.

அந்த வாய்ப்பில் அபிஷேக் ஷர்மா உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி அசத்தி வருகிறார். மறுபுறம் ஓப்பனிங்கில் 3 சதங்கள் அடித்த சாம்சன் ஒரு வழியாக நிலையான இடத்தைப் பிடித்தார். ஆனால் அப்போது திடீரென அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைத்து டி20 அணியின் துணைத்தலைவராக தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

தவறை சரிசெய்த அகர்கர்:

குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கில் தலைமையிலான இளம் இந்திய அணி 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. அந்த வெற்றிக்கு 900க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த சுப்மன் கில் முக்கிய பங்காற்றினார். உடனே அதை வைத்துக்கொண்டு அவரை 3 வகையான இந்திய அணியின் கேப்டனாக வளர்க்க தேர்வுக்குழு திட்டமிட்டது.

அதற்காக டி20 அணிக்குள் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட கில்லுக்கு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பில் தடுமாறிய அவர் கடைசியாக விளையாடிய 18 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மறுபுறம் 2025 ஆசியக் கோப்பையில் மிடில் ஆர்டரில் விளையாடி வெற்றியில் பங்காற்றிய சாம்சன் தென்னாப்பிரிக்க தொடரில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

- Advertisement -

பாராட்ட ஒன்னுமில்ல:

இருப்பினும் கடைசிப் போட்டியில் காயமடைந்த கில்லுக்கு பதிலாக விளையாடிய சாம்சன் 168 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தினார். அதனால் மோசமான ஃபார்மில் இருக்கும் கில்லை உலகக் கோப்பையில் அஜித் அகர்கர் அதிரடியாக கழற்றி விட்டுள்ளது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தியதை வைத்து சுப்மன் கில் டி20 போட்டிகளிலும் அசத்துவார் என்ற நம்பிய தேர்வுக்குழு துணைக் கேப்டனாக அறிவித்தது தவறான முடிவு என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கப்படாதது ஏன்? – காரணம் இதோ

அந்தத் தவறை உணர்ந்துக்கொண்ட அகர்கர் கடைசி நேரத்தில் திருத்தியுள்ளதாகவும் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். எனவே அகர்கரை பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில். “டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய ஆட்டத்திற்காக ஒருவரை டி20யில் தேர்வு செய்தால் இது தான் நடக்கும். இங்கிலாந்து தொடருக்குப்பின் சற்று ஏமாற்றமடைந்த தேர்வாளர்கள், தங்களுடைய தவறை சரி செய்ததே சுப்மன் கில்லை நீக்கியதற்கான அடிப்படையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement