இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் வெளியான வீரர்களின் பட்டியலில் சூரியகுமார் யாதவின் தலைமையின் கீழ் 15 வீரர்களுக்கு முதன்மை அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்த முழு பட்டியலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கப்படாதது ஏன்? : பி.சி.சி.ஐ விளக்கம்
இதே அணிதான் அடுத்து நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கும் என்று தெரிகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் தான் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதான கடைசி டி20 தொடராக இருக்கிறது. இதன் காரணமாக இந்த தொடர் தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று வெளியான 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 15 வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டாலும் ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கப்படாதது குழப்பத்தை ஏற்படுத்துள்ளது. ஏனெனில் எப்போதுமே ஐசிசி தொடருக்கான அணி அறிவிக்கப்படும் போது கூடுதலாக நான்கு முதல் ஐந்து ரிசர்வ் வீரர்களை அறிவிப்பது வழக்கம்.
ஏனெனில் ஐ.சி.சி நடத்தும் பெரிய தொடரின் இடையே சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு பதிலாக ரிசர்வ் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம். இந்நிலையில் இன்று வெளியான இந்த இந்திய அணியில் ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கப்படாதது ஏன்? என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதற்கான தெளிவான விளக்கத்தையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டதாவது : இம்முறை ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கப்படாததற்கு காரணம் யாதெனில் : இந்த டி20 உலக கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் தான் நடைபெறுகிறது. இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் நம்மால் மாற்று வீரர்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.
இதையும் படிங்க : ரிங்கு சிங் அணியில் இருப்பதால் இந்த கூடுதல் சாதகம் இருக்கு.. அதனால் தான் அவரை சேர்த்தோம் – அஜித் அகார்கர் விளக்கம்
அதற்காகவே நாங்கள் எந்த ஒரு ரிசர்வ் வீரரையும் தற்போதைய நிலையில் சேர்க்கவில்லை. தேவைப்படும்போது வீரர்களுக்கு ஏற்றவாறு மாற்று வீரரை தேர்வு செய்து கொள்வோம். இந்திய அணியில் இடம் பிடிக்க காத்திருக்கும் பல்வேறு திறமையான வீரர்கள் நம்மிடம் குவிந்திருக்கின்றனர் என்றும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



