இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
அதனால் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களை கழற்றி விடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அது போன்ற சூழ்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டால் சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்படக்கூடாது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார்.
உழைச்சு வாங்க:
ஏனெனில் பேட்ஸ்மேனாக சுமாராக செயல்படும் அவர் பிளேயிங் லெவனிலேயே இடம் பிடிக்க தகுதியற்றவர் என்று மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். மேலும் பும்ரா போல யாராக இருந்தாலும் கேப்டன்ஷிப், துணை கேப்டன்ஷிப் பதவிகளை சிறப்பாக விளையாடி கடினமாக உழைத்து பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“தங்களுடைய சொந்த செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து துணை கேப்டன் நியமிக்கப்பட வேண்டும். தற்சமயத்தில் அடுத்த இங்கிலாந்து தொடரில் பும்ரா ஃபிட்டாக இருந்தால் உங்களின் கேப்டனாக இருப்பார். சுப்மன் கில் ஆஸ்திரேலியாவில் துணைக் கேப்டனாக இருந்ததாக சில பேச்சுக்கள் காணப்பட்டது. ஆனால் என்ன நடந்தது என்று பாருங்கள். நல்லவேளையாக ரோஹித் இல்லாத போது பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டார்”
கேப்டன் பும்ரா:
“சுப்மன் கேரியர் எங்கே இருக்கிறது என்பதை பாருங்கள். முதலில் நீங்கள் உங்களுடைய செயல்பாடுகளால் அணியில் இருக்க வேண்டும். நியூசிலாந்துக்கு எதிராகவும் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சந்தித்த தோல்விகள் காரணமாக ரோகித் சர்மா டெஸ்ட் கேப்டனாக செயல்பட போதுமானவர் என்று நான் நினைக்கவில்லை. எனவே இங்கிலாந்தில் பும்ரா தான் உங்களுடைய அடுத்த கேப்டனாக செயல்பட வேண்டும்”
இதையும் படிங்க: ஸ்டார்க் மாதிரி இதையாச்சும் பண்ணிருக்கலாம்.. ஷமி வந்துருந்தா இந்தியா ஜெயிச்சுருக்கும்.. ரிக்கி பாண்டிங்
“காயமடைகிறாரா அல்லது தொடர்ச்சியாக விளையாடுகிறாரா என்பதைத் தாண்டி பும்ரா தான் இந்தியாவின் அடுத்த கேப்டனாக இருக்க வேண்டும். எப்படியும் ரோஹித் சர்மா இருப்பதால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் கேப்டனாக முடியாது. எனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் முக்கியமான டெஸ்ட் தொடர்களில் பும்ரா தான் உங்களுடைய கேப்டன்” எனக் கூறினார்.