- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சிராஜ், அஸ்வினை இப்படியா யூஸ் பண்ணுவீங்க.. ரோஹித் கேப்டன்ஷிப் பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சனம்

பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் 36 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா வேகத்துக்கு சாதகமான பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்தது முக்கிய காரணமாக அமைந்தது.

ஏனெனில் ஆரம்பத்திலேயே 46க்கு ஆல் அவுட்டான இந்தியா அதிலிருந்து போராடியும் மீள முடியாமல் தோல்வியை சந்தித்தது. அது போக கடைசி 107 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டாம் லாதம், ரச்சின் ரவீந்திரா, டேவோன் கான்வே ஆகிய 3 இடது கை பேட்ஸ்மேன்கள் விளையாடினர். அப்போது ரவிச்சந்திரன் அஸ்வினை பயன்படுத்தாத கேப்டன் ரோகித் சர்மா சுமாராக பந்து வீசிய சிராஜுக்கு தொடர்ந்து 7 ஓவர்கள் வழங்கினார்.

- Advertisement -

தாமதமான அஸ்வின் பவுலிங்:

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அஸ்வின் அதிக விக்கெட்டுகள் எடுத்து உலக சாதனை படைத்தவர். அப்படிப்பட்ட அவரை நியூசிலாந்துக்கு வெறும் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது மிகவும் தாமதமாக ரோகித் சர்மா பயன்படுத்தியது வெற்றிக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில் இப்போட்டியில் சிராஜ், அஸ்வின் ஆகியோரை ரோகித் சர்மா தவறாக பயன்படுத்தியது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்ததாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா நீண்ட நேரம் பந்து வீசிய போது சிராஜ் ஓரிரு ஓவர்கள் வீசியதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் கட்டுப்படுத்துவதற்கு குறைவான இலக்கு மட்டுமே இருந்த சூழ்நிலையில் அவருக்கு ஆரம்பத்திலேயே 6 ஓவர்கள் கொடுத்தது அதிகம் என்று நான் நினைக்கிறேன். அதே போல அஸ்வினை பயன்படுத்திய விதம் மற்றொரு அங்கமாகும்”

- Advertisement -

ரோஹித் சர்மாவின் தவறு:

“ஆடுகளத்தில் ஆடம்பரமான திருப்பம் இல்லாத போதிலும் கேப்டன் அவரை புதிய பந்தில் பயன்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக பும்ராவுடன் சேர்ந்து நான்காவது ஓவரிலிருந்து அஸ்வின் பந்து வீச வந்திருந்தால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருந்திருப்பார். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களை நீங்கள் பயன்படுத்தும் போது விக்கெட்டுகள் கிடைத்தாலும் ரன்கள் எட்ஜ்கள் வழியாக கூட கிடைக்கும்”

இதையும் படிங்க: அஸ்வின் வழியில்.. நியூஸிலாந்து தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் சுந்தருக்கு அடித்த அதிர்ஷ்டம்

“அந்த வகையில் இப்போட்டியில் ரோகித் சர்மாவின் தந்திரோபாயங்கள் சிறப்பாக இல்லாதது எனக்கு பெரிய ஆச்சரியமாக அமைந்தது” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் இத்தொடரை வெல்ல இந்தியா கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் செல்லவும் அந்த வெற்றிகள் அவசியமாவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -