- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதுல கோலியுடன் கம்பேர் பண்ண தகுதியற்ற ரோஹித்தை டீம்ல இருந்து அவரால் தான் தூக்க முடியும்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் இந்த தொடரில் பின்தங்கியுள்ள இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது.

அத்துடன் 2014க்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது. இந்த தோல்விக்கு சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். அதில் விராட் கோலி முதல் போட்டியில் சதத்தை அடித்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் வலையில் விழுந்து பின்னடைவை கொடுத்து வருகிறார்.

- Advertisement -

கம்பேர் பண்ணாதீங்க:

ஆனால் ரோகித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் மிகவும் சுமாராக செயல்பட்டு இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்து வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் ஒப்பிடும் அளவுக்கு ரோகித் சர்மா தகுதியான பேட்ஸ்மேன் கிடையாது என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மட்டுமே அவரை அணியிலிருந்து நீக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாகவும் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் ஒப்பீடு இருக்கக்கூடாது என்று சொல்வேன். ஏனெனில் விராட் கோலி சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியலில் இருப்பார். ரோஹித் சர்மா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் நல்ல பேட்ஸ்மேன் மட்டுமே”

- Advertisement -

ஓய்வு எப்போது:

“எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நீண்ட கால திட்டத்திற்கு இப்போதும் தகுதியானவர். இருப்பினும் அவருடைய தற்போதைய தடுமாற்றத்தை சரி செய்யாத அளவுக்கு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் என்ன செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். விராட் கோலியை பற்றி அதிகம் பேசி விட்டோம். எனவே அவரை தனியாக விடுங்கள்”

இதையும் படிங்க: அது மட்டும் இல்லனா ரோஹித் சர்மா இந்திய அணியில் இருக்க தகுதியில்லாதவர்.. இர்பான் பதான் விமர்சனம்

“இது ரோகித் சர்மாவை பொறுத்ததல்ல. அணித் தேர்வின் நெறிமுறையை பார்த்தால் தேர்வாளர்களின் தலைவர் தான் அந்த முடிவை எடுக்க வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்ததை செய்யும் ஆற்றல் அவரிடம் மட்டுமே உள்ளது. எனவே எதிர்காலம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ரோகித்தைப் பற்றியது அல்ல. அந்த அதிகாரம் தேர்வுக்குழு தலைவரிடம் உள்ளது. அவர் மந்தமான நிலையில் கீழே இருக்கிறார். மறுபுறம் விராட் கோலி வித்தியாசமான பிரச்சனையைக் கொண்டுள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -