அது மட்டும் இல்லனா ரோஹித் சர்மா இந்திய அணியில் இருக்க தகுதியில்லாதவர்.. இர்பான் பதான் விமர்சனம்

Irfan Pathan
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா இம்முறை எங்களை சொந்த மண்ணில் சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை காண்பித்துள்ளது. மறுபுறம் 340 ரன்களை துரத்திய இந்தியா கடைசி நாளில் குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மீண்டும் சுமாராக பேட்டிங் செய்து தோற்ற இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது. இந்த தோல்விக்கு ரோகித் சர்மா மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

சுமாரான ரோஹித்:

இருப்பினும் இரண்டாவது போட்டியிலிருந்து கேப்டனாக செயல்படும் ரோகித் சர்மா பேட்ஸ்மேனாக பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதே போல கேப்டனாகவும் முக்கிய முடிவுகளை எடுப்பதில் திண்டாடிய அவரது தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2014க்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டுள்ளது.

இது போக சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வரலாறு காணாத வைட்வாஸ் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் கேப்டனாக மட்டுமல்லாமல் போனால் ரோஹித் சர்மா தற்போதைய இந்திய அணியில் இருப்பதற்கு தகுதியற்றவர் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஏமாற்றமான கேப்டன்:

“20000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த ரோஹித் சர்மா தடுமாறுகிறார். அவருடைய ஃபார்ம் அவருக்கு ஆதரவு கொடுப்பதாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் கேப்டனாக இருப்பதால் அவர் விளையாடுகிறார். இல்லையெனில் இந்திய அணிக்காக விளையாட முடியாது. ஜெய்ஸ்வால், ராகுல், கில் ஆகியோர் இருப்பார்கள். ஆனால் தற்போது தடுமாறும் விதத்தை வைத்து ரோகித் சர்மாவுக்கு பிளேயிங் லெவனில் இடம் இருக்காது என்பதே நிதர்சனமாகும்”

இதையும் படிங்க: கோலியின் பட்டம் இறந்துடுச்சு.. இனிமேல் அவர் தான் இந்தியாவின் புதிய கிங்.. விராட் கோலியை விமர்சித்த சைமன் கேட்டிச்

“இந்தத் தொடரை குறைந்தபட்சம் சமன் செய்ய அடுத்த போட்டியை நீங்கள் வென்றாக வேண்டும். அதற்கு அவர் கேப்டனாக அணியுடன் இருப்பார். ஆனால் அவருடைய ஃபார்ம் இந்தியாவிலும் சுமாராகவே இருந்தது. இப்படி ரோஹித் சர்மா பேட்டிங் செய்வதை பார்ப்பது ஏமாற்றமாக இருக்கிறது. அவர் எப்போதும் நன்றாக விளையாடுவதையே நான் பார்க்க விரும்புகிறேன். ஆனால் ஃபார்ம் மற்றும் உடல்நிலை ஆகியவை ரோகித் சர்மாவை முன்னோக்கி அழைத்துச் செல்வது போல் எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.

Advertisement