வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்று இந்தியா அசத்தியது. அந்தத் தொடரில் கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா விளையாடி வென்ற விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் மழையால் 2 நாட்கள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டதால் அந்தப் போட்டி டிராவில் முடிவடையும் என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால் கடைசி 2 நாட்களில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா டி20 போல விளையாடி அட்டகாசமான வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து இந்தியா கோப்பையை முத்தமிட்டது. இந்நிலையில் சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் வெற்றிக்காக சுயநலமின்றி விளையாட வேண்டுமென்ற அணுகுமுறையை இந்திய அணியில் ரோஹித் சர்மா கொண்டு வந்துள்ளதாக சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
சுயநலமற்ற ரோஹித் சர்மா:
2023 உலகக் கோப்பை மற்றும் 2024 டி20 உலகக் கோப்பையில் அதை செய்த ரோஹித் சர்மா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சுயநலமற்ற அணுகு முறையை கொண்டு வந்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். அதுவே இந்திய கிரிக்கெட்டுக்கு கேப்டனாக ரோஹித் சர்மா செய்த உண்மையான பங்களிப்பு என்று பாராட்டும் மஞ்ரேக்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது தான் ரோஹித் சர்மா கேப்டனாக விட்டுச் செல்லக்கூடிய மரபாகும்”
“இப்படித்தான் அவர் நினைக்கிறார். உலகின் டாப் அணியாக இருக்கும் நாம் நேரம் வீணானாலும் வெற்றி பெறுவோம் என்ற சாம்பியன் அணுகுமுறையை இந்தியா அவருடைய தலைமையில் காட்டியது. அதற்கு எடுத்துக்காட்டாக கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா இந்தியாவை வழிநடத்தினார். அதுவே இந்திய கிரிக்கெட்டில் ரோகித் சர்மா விட்டுச் செல்லக்கூடிய பங்களிப்பாகும்”
சாதனையை விட வெற்றியே முக்கியம்:
“ரோகித் சர்மா செயல்முறைகள் பற்றி கவலைப்படுவதில்லை. 2023 உலகக் கோப்பை போல நீங்கள் அணியின் வெற்றிக்காக மட்டுமே விளையாட வேண்டும் என்று அவர் கருதுகிறார். அவர் பெரிய சதம் அடிக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. தற்போது இங்கே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடும் அவர் தன்னுடைய மகிழ்ச்சியுடன் கொடுத்தார்”
இதையும் படிங்க: விராட் கோலியை விட அவர் சிறந்த ரெகார்ட்டை வெச்சுருக்கும் ஆதாரம் போதுமா.. பாக் கேப்டன் பதிலடி
“அவருடைய ஆட்டத்தால் திடீரென அப்போட்டியில் இந்தியா வெற்றி கண்டது. அதற்காக நீங்கள் ரோஹித் சர்மாவை பாராட்ட வேண்டும்” என்று கூறினார். அந்த வகையில் ரோஹித் தலைமையில் அதிரடியான அணுகு முறையில் விளையாடும் இந்தியா 2023 உலகக் கோப்பை ஃபைனல் சென்றது. 2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து இந்தியா வென்று சாதனையும் படைத்தது.



