அஷ்வின் சிறப்பாக செயல்பட்டாலும் டி20 உ.கோ விளையாட அந்த குறையை சரிசெய்ய வேண்டும் – முன்னாள் வீரர் வார்னிங்

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் அடுத்தடுத்த டி20 தொடர்களில் பங்கேற்று வரும் இந்தியா அதில் சுழற்சி முறையில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது. அதே சமயம் ஐபிஎல் தொடரில் திறமையை வெளிப்படுத்திய சீனியர் வீரர்களுக்கு வாய்பளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடி வரும் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010இல் அறிமுகமாகி 3 வகையான இந்திய அணியிலும் முதன்மையான சுழல் பந்து வீச்சாளராக விளையாடினார்.

ashwin

ஆனால் அவரை வளர்த்த கேப்டன் தோனி 2017இல் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி அதே வருடம் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஒருசில போட்டிகளில் சுமாராக செயல்பட்டார் என்பதற்காகவும் சஹால் – குல்தீப் யாதவ் ஆகியோர் வந்து விட்டார்கள் என்பதாலும் இந்திய வெள்ளை பந்து அணியிலிருந்து அஷ்வினை மொத்தமாக கழற்றி விட்டார்.

- Advertisement -

அஷ்வின் கம்பேக்:
இருப்பினும் ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் 2019 உலக கோப்பைக்கு பின் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பார்ம் இழந்தனர். மேலும் அந்த சமயத்தில் இந்திய அணி நிர்வாகத்தில் விராட் கோலியின் ஆதிக்கமும் குறையத் தொடங்கியதால் ஒரு கட்டத்தில் வெள்ளை பந்து கேரியர் முடிந்துவிட்டது என்று கருதப்பட்ட அஷ்வின் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் விளையாட நேரடியாக தேர்வு செய்யப்பட்டார்.

ashwin

அப்படி 4 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த அவர் வாய்ப்பு கிடைத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் அதன்பின் நடந்த நியூசிலாந்து டி20 தொடரில் வாய்ப்பு பெற்றார். அதன்பின் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் காயத்தால் வெளியேறிய அவரை அடுத்ததாக நடந்த வெஸ்ட் இண்டீஸ், இலங்கை டி20 தொடர்களில் கண்டுகொள்ளாத தேர்வுக்குழு தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்களிலும் தேர்வு செய்யாமல் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

சிறப்பான செயல்பாடு ஆனால்:
அதற்கு காரணம் ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக நிறைய போட்டிகளில் ஜோஸ் பட்லருடன் டாப் ஆர்டரில் களமிறங்கி கேரியரில் முதல் முறையாக அரைசதம் அடித்து கணிசமான ரன்களை சேர்த்த அவர் பந்துவீச்சிலும் அசத்தி நல்ல ஆல்-ரவுண்டராக செயல்பட்டார். அதனால் 8 மாதங்கள் கழித்து இந்திய டி20 அணியில் விளையாடி வரும் அவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இதுவரை 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை 6.66 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து வருவதுடன் முதல் போட்டியில் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக்குடன் 4 ஓவரில் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங்கிலும் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

Ravichandran Ashwin

இதனால் 2021 உலகக்கோப்பை போல இம்முறையும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சஹால், ஜடேஜா போன்றவர்களை காட்டிலும் அஷ்வின் நல்ல எக்கனாமியில் பந்து வீசுகிறார் என்றாலும் விக்கெட் எடுப்பதில் தடுமாறுகிறார் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். அந்த ஒரு அம்சத்தை தவிர டி20 உலக கோப்பையில் அஷ்வின் இடம் பிடிப்பதை வேறு எதுவும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போது அவரின் போட்டியாளர்கள் யார்? சஹால் தற்போதுள்ள பார்முக்கு முதல் ஸ்பின்னராக உறுதி செய்யப்பட்டுள்ளார். அவருக்குப்பின் அக்ஷர் பட்டேல், ஜடேஜா ஆகியோர் பந்துவீசக் கூடியவர்கள். அதேபோல் தீபக் ஹூடா ஒருசில ஓவர்களை வீசுகிறார். அவருக்குப்பின் குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் உள்ளனர். இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அஷ்வின் தேர்வு செய்யப்பட்டது சிறந்த முடிவாகும். கடந்த சில வருடங்களாக ஐபிஎல் டி20 தொடரில் அவர் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்”

Sanjay

“சஹாலுடன் அஷ்வின் பந்து வீசுவதை நான் விரும்புகிறேன். தென்ஆப்பிரிக்காவின் சம்சி, கேசவ் மகாராஜ் ஆகியோரை போல் டி20 கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுக்கள் எடுப்பதே சுழல் பந்துவீச்சாளர்களின் வேலையாகும். அந்த ஒரு இடத்தில் தான் அஷ்வின் தடுமாறுகிறார். அவர் நல்ல எக்கனாமியில் மட்டுமே பந்து வீசுகிறார். எனவே சஹால் போன்ற இதர பவுலர் விக்கெட்களை எடுத்தால் அஷ்வின் நல்ல எக்கனாமியில் பந்து வீசுவார்.

இதையும் படிங்க : IND vs WI : இன்றைய 4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் சில போட்டிகளில் அஷ்வின் விக்கெட்களை எடுத்தது நல்ல அறிகுறியாகும். அதேபோல அவர் செயல்பட்டால் விக்கெட் எடுக்கக்கூடிய முதல் சுழற்பந்து வீச்சாளராக உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பார்” என்று கூறினார்.

Advertisement