IND vs WI : இன்றைய 4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

Rohit-Sharma-IND-Captain
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று அமெரிக்காவில் உள்ள புளோரிடோ நகரில் நடைபெற உள்ளது.

Thomas

- Advertisement -

அதன்படி இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது ஃப்ளோரிடா சென்றடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்கவுள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Avesh Khan

அந்த வகையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் ஒரு மாற்றம் இருக்கும் என்றும் அந்த மாற்றமானது ஆவேஷ் கான் வெளியேற்றப்படுவதுதான் என்றும் கூறப்படுகிறது. ஆவேஷ் கானிற்கு பதிலாக இந்த தொடரில் இதுவரை விளையாடாத ஹர்ஷல் படேல் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதனை தவிர்த்து இந்திய அணியில் பெரிதாக வேறு எந்த மாற்றமும் இருக்காது. அதன்படி இன்றைய நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அவ்ளோதான் ஷமியின் கேரியர் முடிஞ்ச்சி, தேர்வுக்குழு மறைமுக அறிவிப்பு – வெளியான புதிய தகவல் இதோ

1) ரோஹித் சர்மா, 2) சூரியகுமார் யாதவ், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) ரிஷப் பண்ட் 5) ஹார்டிக் பாண்டியா, 6) தீபக் ஹூடா, 7) தினேஷ் கார்த்திக், 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) புவனேஷ்வர் குமார், 10) ஹர்ஷல் படேல், 11) அர்ஷ்தீப் சிங்

Advertisement