கேஎல் ராகுலை காப்பாத்த பாக்குறீங்களா? அவருக்கு இதுவே அதிகம்.. இந்திய அணியை விமர்சித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் சமீப காலங்களாகவே சுமாராக விளையாடி வருகிறார். அதனால் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஏற்கனவே வாய்ப்பை இழந்த அவருக்கு அனுபவத்தை கருத்தில் கொண்டு டெஸ்ட் அணியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வாய்ப்பிலும் சமீபத்திய வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து தொடர்களில் அவர் சிறப்பாக விளையாடவில்லை.

மறுபுறம் அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் ஆகிய இளம் வீரர்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். எனவே ராகுலை கழற்றி விட்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அந்த நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

- Advertisement -

அதிர்ஷ்ட வாய்ப்பு:

அதில் எப்படியாவது ராகுல் ஃபார்முக்கு திரும்பி விளையாட வைக்க வேண்டும் என்பதற்காக இந்தியா ஏ விளையாடிய 2வது பயிற்சி போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அவருக்கு துவக்க வீரராகவும் களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பிலும் ராகுல் அரை சதம் கூட அடிக்காமல் ஏமாற்றத்தையே கொடுத்தார். அதனால் முதல் ஆஸ்திரேலிய போட்டியில் ரோஹித்துக்கு பதிலாக ராகுலை விளையாட வைக்கும் இந்திய அணி நிர்வாகத்தின் திட்டம் வெற்றி பெறவில்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் கேஎல் ராகுலுக்கு ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலேயே வாய்ப்பு கொடுத்திருக்க கூடாது என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார் இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக இந்திய அணி பதற்றமான நிலையில் இருக்கிறது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தோற்றதைக் கண்டு அவர்கள் அதிர்ந்துள்ளார்கள்”

- Advertisement -

வாய்ப்பு எதுக்கு:

“அப்போது தான் திட்டங்கள் மோசமாக தொடங்கப்படுகின்றன. அங்கே தான் இழப்பதற்கு எதுவுமில்லை என்று நினைத்து நீங்கள் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்ததாக தெரிகிறது. கே.எல் ராகுலுக்கும் அணி நிர்வாகம் தேர்வுக் குழுவுக்கும் ஏதேனும் ஈர்ப்பு இருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஏனெனில் எப்படியாவது அவரை பிளேயிங் லெவனில் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்”

இதையும் படிங்க: ரச்சின் ரவீந்திரா விடயத்தில் சி.எஸ்.கே அணி செய்தது தவறு.. இந்திய அணிதான் முக்கியம் – உத்தப்பா விமர்சனம்

“அதனால் அவர்கள் அபிமன்யு ஈஸ்வரனை அதிகமாக நம்பவில்லை. இவ்வளவு வாய்ப்புகள் பெறுவதற்கே முதலில் ராகுல் தன்னை அதிர்ஷ்டமானவராக கருத வேண்டும். பேட்டிங் சராசரி இவ்வளவு குறைந்தும் அவரைப் போன்ற சில வீரர்களுக்கு மட்டுமே இது போன்ற வாய்ப்புகள் மீண்டும் மீண்டும் கிடைக்கும். ராகுல் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என்று அவர்கள் நம்புவதாக நினைக்கிறேன். ஆனால் அது வேலையாகாததால் ஜெய்ஸ்வால் – ஈஸ்வரன் ஓப்பனிங்கில் விளையாடுவதையும் அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அதுவே சரியானதாக இருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement