அவர் இந்தியாவின் மிஸ்டர் கன்சிஸ்டென்ட் பேட்ஸ்மேன்.. சிரிப்புக்காக சொன்ன பட்டத்தை நிஜமாக்கிட்டாரு.. மஞ்ரேக்கர்

Sanjay manjrekar
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி துவங்குகிறது. முன்னதாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றதால் இம்முறை இங்கிலாந்து மண்ணில் இந்தியா பேட்டிங்கில் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் போட்டியிலேயே வரலாற்றில் முதல் முறையாக 5 சதங்கள் அடித்து இந்தியா அபார சாதனை படைத்தது. அதற்கடுத்த போட்டியில் கேப்டன் சுப்மன் கில் மட்டும் 430 ரன்கள் அடித்து சாதனைகள் புரிந்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். 3வது போட்டியில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி லார்ட்ஸ் மைதானத்தில் 2வது முறையாக சதத்தை அடித்து அசத்தினார்.

- Advertisement -

மிஸ்டர் கன்சிஸ்டென்ட்:

அந்த வகையில் இங்கிலாந்து மண்ணில் பேட்டிங் துறையில் இந்தியா ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் இங்கிலாந்தில் விளையாடும் இந்திய பேட்ஸ்மேன்களில் கேஎல் ராகுல் மட்டுமே திருப்தியளிக்கும் வகையில் தொடர்ச்சியாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அனுபவம் மற்றும் திறமை இருந்தும் ராகுல் தொடர்ச்சியாக ஒரு வெளிநாட்டு தொடரில் கூட 200 ரன்களுக்கு மேல் அடித்ததில்லை அவர் கூறியுள்ளார்.

அதனால் மிஸ்டர். கன்சிஸ்டென்ட் என்று நகைச்சுவைக்காக தாம் கொடுத்தப் பட்டத்தை ராகுல் தற்போது உண்மையாகவே எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி மஞ்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “இம்முறை கேஎல் ராகுலை பார்ப்பது ஒரு வல்லுனர் மற்றும் முன்னாள் வீரராக எனக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுத்துள்ளது. அவரிடம் எப்போதும் ஆட்டம் இருக்கிறது”

- Advertisement -

மஞ்ரேக்கர் மகிழ்ச்சி:

“ஆம் அவரிடம் சில குறைபாடுகள் இருந்தது. ஆனால் அதில் வேலை செய்த அவர் குறைகளை சரி செய்துள்ளார். அவரிடம் சீராக தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கும் திறன் மட்டுமே இல்லாமல் இருந்தது. அதனால் ஒரு நிகழ்ச்சியில் நாங்கள் “மிஸ்டர் கன்சிஸ்டன்ட் கேஎல் ராகுல்” என்று நகைச்சுவையாக பட்டமளித்தோம். அதை அவர் உண்மையாக சம்பாதிக்க நீண்ட காலம் தேவைப்பட்டது”

இதையும் படிங்க: சாய் சுதர்சனுக்கு சான்ஸ் கொடுங்க.. கருண் நாயரால் இனி இந்தியாவுக்கு அந்த பயன் கிடைக்காது.. தீப்தாஸ் குப்தா

“50 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் இந்தியாவுக்காக விளையாடியுள்ள அவர் இப்போது தான் கச்சிதமான ஆட்டத்தை நெருங்கியுள்ளார். அவரது தற்போதைய ஆட்டத்தில் பெரிய பலவீனம் இருப்பதாக தெரியவில்லை. அதனாலேயே கேரியரில் முதல் முறையாக ஒரு வெளிநாட்டு தொடரில் அவர் 200க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாகும்” என்று கூறினார்.

Advertisement