இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணியை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் இந்தியா தோற்கடித்தது. ஆனால் 3வது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை போராடி சாய்த்த இங்கிலாந்து 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அதனால் ஏமாற்றத்தைச் சந்தித்த இந்திய அணி 4வது போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய தயாராகி வருகிறது. முன்னதாக இத்தொடரில் கருண் நாயர் சுமார் 8 வருடங்கள் கழித்து போராடி இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். 2016 இங்கிலாந்து தொடரில் அறிமுகமான அவர் சென்னையில் சேவாக்கிற்கு பின் முச்சதத்தை அடித்து சாதனைப் படைத்தார்.
சொதப்பிய கருண்:
அதன் பின் பெரிய ரன்கள் குவிக்காததால் கழற்றி விடப்பட்ட அவருடைய கேரியர் முடித்ததாக கருதப்பட்டது. ஆனாலும் மனம் தளராக அவர் உள்ளூர் மற்றும் கவுண்டி தொடரில் ஏராளமான ரன்கள் குவித்து இந்தியாவுக்காக மீண்டும் தேர்வானார். அந்த வாய்ப்பில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரட்டை சதத்தை அடித்த அவர் முதல் போட்டியில் மிடில் ஆர்டரில் விளையாடி பெரிய ரன்கள் எடுக்கவில்லை.
எனவே சாய் சுதர்சனை அறிமுகப் போட்டியுடன் கழற்றி விட்ட இந்திய அணி நிர்வாகம் அவருக்கு 3வது இடத்தை கொடுத்தது. ஆனால் அந்த வாய்ப்பிலும் அரை சதம் கூட அடிக்காத கருண் நாயர் இந்தியாவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தார். குறிப்பாக 3வது போட்டியின் 2வது இன்னிங்ஸில் பந்தை தவறாக படித்த அவர் விக்கெட்டை இழந்தது இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது.
சுதர்சனுக்கு வாய்ப்பு:
இந்நிலையில் 33 வயதாகும் கருண் நாயரால் இந்திய அணிக்கு வருங்காலத்தில் பயனுமில்லை என்பதால் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் பிளேயிங் லெவனில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றத்தை செய்ய விரும்ப மாட்டீர்கள். அந்த ஒரு மாற்றம் கருண் நாயருக்கு பதிலாக சுதர்சன் விளையாடுவதாக இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: இப்போ கூட ஒன்னும் பிரச்சனை இல்ல.. ப்ளீஸ் கம்பேக் குடுங்க.. விராட் கோலிக்கு – மதன் லால் கோரிக்கை
“ஏனெனில் கருண் நாயர் எந்த ரன்களும் குவிக்கவில்லை. நல்ல துவக்கத்தைப் பெற்ற அவர் அதைப் பெரிதாக மாற்றவில்லை. வெள்ளைக்கோட்டில் அவர் சிரமமின்றி கச்சிதமாக நம்பிக்கையை உண்டாக்கும் வகையில் விளையாடியதாகவும் எனக்குத் தெரியவில்லை. எனவே இந்த இங்கிலாந்து தொடரில் இளம் வீரர் மீது நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் சுதர்சனை தேர்ந்தெடுங்கள். வருங்காலத்தை கருத்தில் கொண்டால் சுதர்சனை தேர்ந்தெடுங்கள். அடுத்ததாக நீங்கள் எப்போது இங்கிலாந்து வருவீர்கள் என்பது தெரியாது” எனக் கூறினார்.



