சச்சின், கோலி ஹீரோ கலாச்சாரமே 8 – 0 வீழ்ச்சிக்கு காரணம்.. ஆஸி மாதிரி அகர்கர் இதை செய்யனும்.. மஞ்ரேக்கர் அதிரடி

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் சச்சின் முதல் விராட் கோலி வரை இந்திய அணி அவ்வப்போது நட்சத்திர வீரர்களின் கலாச்சாரத்தால் வீழ்ச்சியை சந்திப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி சேனா நாடுகளில் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளனர். எனவே அவர்களை உயர்தரமான மதிப்பீடுகளில் அளவிடுவது நியாயமானது. தலைமுறையில் வீழ்ச்சி ஏற்படுவது அனைத்து அணிகளிலும் நிகழக்கூடியது. உலகின் சிறந்த அணிகளிலும் தலைமுறையில் மாற்றங்கள் ஏற்படும். அது இந்திய அணியை அதிகமாக பாதிக்கிறது என்று நான் நம்புகிறேன்”

- Advertisement -

நட்சத்திர கலாச்சாரம்:

“சில குறிப்பிட்ட வீரர்கள் மீது இந்தியாவில் நட்சத்திர கலாச்சாரம் இருப்பதே அதற்கு முக்கிய காரணமாகும். 2011 – 2012 காலகட்டத்திலும் இப்போதும் சில நட்சத்திர வீரர்கள் தங்களுடைய மொத்த கேரியரில் வெளிப்படுத்தியதை விட சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி அணியை கீழே இழுத்துத் தள்ளினார்கள். 2011இல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் 8 – 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது”

“அந்த சமயத்தில் சச்சின் 35, சேவாக் 19.91, லக்ஷ்மன் 21.06 என்ற சுமாரான சராசரியை கொண்டிருந்தார்கள். டிராவிட் மட்டுமே இங்கிலாந்தில் 76.83 என்ற சராசரியில் உயர்ந்து நின்றார். ஆனால் ஆஸ்திரேலியாவில் அவரும் 24.25 என்ற சுமாரான சராசரியிலேயே விளையாடினார். இருப்பினும் நட்சத்திர வீரர்கள் என்று வரும் போது நமது நாட்டில் உணர்வுகள் உயர்வாக இருக்கும்”

- Advertisement -

ஆஸ்திரேலியா மாதிரி:

“அதன் காரணமாக கிரிக்கெட்டை தாண்டி தேர்வாளர்கள் அந்த வீரர்களின் வழியில் விளையாட விடுகிறார்கள். ஆனால் அதன் காரணமாக அந்த நட்சத்திர வீரர்கள் தங்களுடைய கேரியரின் இறுதியில் வில்லன்களாக வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக முடிவுகளை எடுக்க தேர்வு குழுவினர் பயப்படுகிறார்கள். ஆனால் தற்போது மிஸ்டர் அஜித் அகர்கர் வீரர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சரியான முடிவை எடுக்க நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: 12 ஓவரில் 154 ரன்ஸ்.. தெ.ஆ டி20 தொடரில் 2 ரன்னில் நிகழ்ந்த சோக்கிங்.. வெற்றியை பறித்த டர்பன்

“முன்னாள் வீரர்களான நாங்கள், ஊடகங்கள், நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தான் இந்திய கிரிக்கெட்டின் உண்மையான சக்திகள். அவர்கள் நட்சத்திர வீரர்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட்டை முன்னிறுத்த வேண்டும். வீரர்கள் ஓய்வு பெறும் வரை ஆஸ்திரேலியா எப்போதும் காத்திருக்காது. நட்சத்திர வீரர்கள் தடுமாறுவதற்கு முன்பாகவே அவர்கள் நீக்கி விடுவார்கள்”என்று கூறினார்.

Advertisement