இந்தக் கால பிளேயர்ஸ் ஈஸியா 100மீ சிக்ஸ் அடிப்பாங்க.. ஆனா தடுப்பட்டதை மறக்க இதான் காரணம்.. மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தோல்விக்கு சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச் முக்கிய காரணமானது. அந்த பிட்ச்சில் 2 அணிகளுமே பேட்டிங் செய்வதற்கு திண்டாடின என்றே சொல்லலாம். அதில் தென்னாப்பிரிக்காவை விட 2வது இன்னிங்சில் படுமோசமாக பேட்டிங் செய்த இந்தியா 124 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோல்வியைச் சந்தித்தது.

அதனால் சுழல் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி சொந்த மண்ணில் மற்றுமொரு படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடரிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறியது ஒயிட்வாஸ் படுதோல்வியைப் பரிசளித்தது. இந்நிலையில் தற்போதைய கிரிக்கெட்டில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

100மீ சிக்ஸ் ஈஸி:

அதனால் அவர்களுடைய தடுப்பாட்டம் இயற்கையிலேயே குறைந்து விட்டதாக மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். அதற்கு தற்காலத்தில் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களின் ஆதிக்கமே காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இன்றல்ல கடந்த 5 வருடங்களாகவே டெஸ்ட் போட்டிகள் மிகவும் குறைவாக விரும்பப்படும் ஃபார்மட்டாக மெதுவாக உறுதியாக மாறத் துவங்கியுள்ளது”

“குறிப்பாக வீரர்கள் மற்றும் பங்குதாரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை குறைவாகவே விரும்புகிறார்கள். நீண்ட காலத்துக்கு முன்பே சுவரில் எழுதப்பட்ட இந்த உண்மைக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தனியார் டி20 மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகளுக்கு கடைசி முக்கியத்துவம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே உங்களுடைய தடுப்பாட்டத்திறனை கூர்மைப்படுத்தும் ஒரே ஃபார்மட்டாகும்”

- Advertisement -

தடுப்பாட்டம் கஷ்டம்:

“அதனாலேயே 2000ஆம் ஆண்டு காலகட்டங்களில் விளையாடிய வீரர்கள் நல்ல தடுப்பாட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஏனெனில் அப்போது டெஸ்ட் போட்டிகள் நம்பர் ஒன் ஃபார்மட்டாக இருந்தது. ஆனால் அது தற்போதைய வீரர்களின் 3வது முக்கியத்துவமாக மாறிவிட்டது. அதனால் தடுப்பாட்டம் என்பது கடைசி முக்கியத்துவமாகி விட்டதால் பேட்ஸ்மேன்கள் நல்ல பந்துகளை அடிக்காமல் விடுவது குறைந்து விட்டது”

இதையும் படிங்க: முதல் டெஸ்டில் சொதப்பி இருந்தாலும் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ

“இந்தக் கால பேட்ஸ்மேன்களிடம் 100 மீட்டர் சிக்ஸர் அடிக்குமாறு கேட்டால் அனைவரும் அதை செய்வார்கள். ஆனால் நல்ல பந்துகளை அடிக்காமல் விடுவது அவர்களுக்கு கடினம். அதற்காக அவர்களைக் குறை சொல்ல முடியாது. ஏனெனில்கடந்த சில வருடங்களில் கிரிக்கெட்டின் அடிப்படையே மாறிவிட்டது. எனவே நமக்கு நல்ல டெஸ்ட் தொடர் வேண்டுமெனில் அதற்கு இங்கிலாந்தில் இருப்பதைப் போன்ற பிட்ச்கள் வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement