இந்த இங்கிலாந்து தொடர் முழுவதும் கே.எல் ராகுல் அதனை செய்வார் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர அனுபவ வீரரான கே.எல் ராகுல் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 42 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸின்போது 137 ரன்களையும் குவித்து அசத்தினார். கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியில் நிலையான பேட்டிங் ஆர்டர் இல்லாமல் தவித்து வந்த அவருக்கு தற்போதைய இங்கிலாந்து தொடரில் துவக்க வீரருக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

கே.எல் ராகுல் தனது பார்மை தொடர வேண்டும் : சஞ்சய் மஞ்சரேக்கர்

அந்த வகையில் தற்போதைய இந்திய அணியின் மூத்த வீரராக இருக்கும் அவர் தனது பொறுப்பினை உணர்ந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை இந்த முதல் போட்டியில் வெளிப்படுத்தி உள்ளார். அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள நான்கு போட்டிகளிலும் விளையாட இருக்கும் அவர் இந்த டெஸ்ட் தொடரில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் இந்த இங்கிலாந்து தொடரில் கே.எல் ராகுல் தனது திறமைக்கு ஏற்ப சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அதனை அவர் நிச்சயம் செய்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

தற்போதைய இந்திய அணியில் அனுபவ வீரராக கே.எல் ராகுல் இருக்கிறார். எனவே இந்த முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது மட்டுமல்லாமல் இனிவரும் ஆட்டங்களிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை தொடர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் கே.எல் ராகுலின் திறமைக்கு ஏற்ப முழுமையான ஆட்டம் இன்னும் வெளிவரவில்லை.

- Advertisement -

இந்த தொடரில் அவர் அதனை செய்வார் என்று நம்புகிறேன். அதேபோன்று ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளை மிகவும் ரசித்து விளையாடுகிறார். அவர் ரன்கள் எடுக்கும் வேட்கையுடன் இருப்பதனால் அந்த பார்மை அப்படியே தொடர்ந்து வருகிறார். அதேபோன்று சுப்ம கில் நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடுவது சரியான தேர்வு.

இதையும் படிங்க : சி.எஸ்.கே தோல்வி எதிரொலி : முற்றிலுமாக புனரமைக்கப்டும் சேப்பாக்கம் மைதானம் – விவரம் இதோ

ஏனெனில் நான்காம் இடத்தில் அவரால் எளிமையாக விளையாட முடியும். இந்த தொடரில் அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று தான் நம்புவதாக சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement