சி.எஸ்.கே தோல்வி எதிரொலி : முற்றிலுமாக புனரமைக்கப்டும் சேப்பாக்கம் மைதானம் – விவரம் இதோ

Chepauk
- Advertisement -

இந்தியாவில் உள்ள பாரம்பரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான சேப்பாக்கம் மைதானம் பல்வேறு வரலாற்றுப் போட்டிகளை நடத்திய சிறப்பு முக்கிய ஒரு மைதானம். இந்த மைதானத்தை தலைமை இடமாக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் ஆனியானது ஆண்டுதோறும் இங்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறது. காலம் காலமாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்பட்டு வரும் இந்த சேப்பாக்கம் ஆடுகளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல்வேறு வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ளது.

முற்றிலும் மாற்றியமைக்கப்படும் சேப்பாக்கம் மைதானம் :

அதுமட்டும் இன்றி சென்னை அணியின் கோட்டையாக பார்க்கப்படும் இந்த ஆடுகளத்தில் சிஎஸ்கே அணி எப்போதும் ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. ஆனால் இந்தாண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த சென்னை அணி பல்வேறு தோல்விகளை சந்தித்து இருந்தது.

- Advertisement -

அதற்கு முக்கிய காரணம் இந்த ஆண்டு மைதானத்தின் தன்மையை கணிக்க முடியாமல் சிஎஸ்கே அணியின் வீரர்களே தடுமாறியது தான் பெரிய சரிவுக்கு காரணமாகவும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் சேப்பாக்கம் ஆடுகளத்தை தற்போது முற்றிலுமாக மாற்றுவதற்காக தமிழக கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள புற்களை முழுவதுமாக நீக்கிவிட்டு ஆடுகளம் மறு சீரமைப்பு செய்யப்பட இருக்கிறது. ஏனெனில் இனிவரும் காலங்களில் இங்கு நடைபெறும் ஆட்டங்களை கூடுதல் சுவாரசியமாக்க வேண்டும் என்பதற்காகவும் நிலையான ஒரு ஆடுகளத்தை இங்கு தயார் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

- Advertisement -

எதிர்வரும் டிசம்பர் மாதம் பணிகள் அனைத்தும் முடிவடைந்து மீண்டும் புதுப்பொலிவுடன் சேப்பாக்கம் மைதானம் போட்டிகளை நடத்த தயாராகும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெறவிருக்கும் வேளையில் சேப்பாக்கம் மைதானத்தை புதிதாக தயார் செய்தால் மேலும் போட்டிகள் சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கடவுளிடம் வரம் வாங்கி வந்தவர் பும்ரா.. அதனால் தான் அவரால் இதை செய்யமுடியுது – ராபின் உத்தப்பா பாராட்டு

தற்போது சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் எந்த போட்டிகளும் நடைபெறாது என்றும் அதன்பிறகு அங்கு போட்டிகள் நடைபெறும் என்றும் தமிழக கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement