கடவுளிடம் வரம் வாங்கி வந்தவர் பும்ரா.. அதனால் தான் அவரால் இதை செய்யமுடியுது – ராபின் உத்தப்பா பாராட்டு

Uthappa and Bumrah
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தில் முதுகு பகுதியில் காயம் அடைந்தார். அதன்பிறகு அந்த காயத்திற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பும்ரா ஐபிஎல் தொடரின் போது தான் மீண்டும் கம்பாக் கொடுத்திருந்தார். அப்படி ஐபிஎல் தொடரில் களமிறங்கிய ஜஸ்ப்ரீத் பும்ரா அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.

கடவுளிடம் வரம் வாங்கி வந்தவர் பும்ரா : ராபின் உத்தப்பா

அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இடம் பிடித்திருந்தார். ஆனாலும் பணிச்சுமை காரணமாக இந்த தொடரின் மூன்று போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடிய அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

- Advertisement -

அவரது பந்துவீச்சு தொடர்ந்து சிறப்பாக இருந்து வரும் வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வெற்றிபெற வேண்டுமெனில் பும்ரா முக்கியம் என்று பலரும் பேசி வருகின்றனர். ஆனால் இரண்டாவது போட்டியின் போது பும்ரா ஓய்வெடுத்துக் கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் பும்ரா வித்தியாசமான ஆக்ஷனை கொண்டிருந்தாலும் பெரியளவில் காயம் அடையாமல் இருந்து வருவது ஆச்சரியமான ஒன்று என்றும் அவரது பந்துவீச்சு மிகச் சிறப்பான ஒன்று என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

பும்ரா மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனெனில் அவரைப் போன்ற வித்தியாசமான ஆக்சனுடன் பந்து வீசும் வீரர்கள் பெரிய காயம் அடையாமல் இருப்பது ஆச்சரியம்தான். கடவுளிடம் வரம் வாங்கி வந்த வீரர் என்று நான் அவரை கருதுகிறேன். ஏனெனில் அவருக்கு காயங்கள் இருந்தாலும் பெரிய அளவில் எந்த காயமும் இல்லை. இப்படி ஒரு பௌலிங் ஸ்டைலை வைத்துக் கொண்டு இந்த அளவிற்கு விளையாடுவது மிகச் சிறப்பான ஒரு விடயம்.

இதையும் படிங்க : 2 ஆவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை முந்த காத்திருக்கும் ரிஷப் பண்ட் – விவரம் இதோ

கடினமான உழைப்பாளியான அவர் தனது பந்துவீச்சில் ஏகப்பட்ட முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளார். தற்போது உலகின் நம்பர் ஒன் பௌலர் என்றால் பும்ரா தான் என்றும் தான் கருதுவதாக ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement