- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி ஒரு சக்ஸஸ்புல் கேப்டன் என்று நான் சொல்ல இதுவே காரணம் – சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பை தொடரினை இளம் வீரர்களை கொண்ட அணியோடு கைப்பற்றி வரலாறு நிகழ்த்தியிருந்தார். அதற்கடுத்து 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை ஒருநாள் தொடர் மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடர் என அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகளை வென்று அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

எம்.எஸ் தோனி மிகச்சிறந்த கேப்டன் : சஞ்சய் மஞ்சரேக்கர்

பல ஆண்டுகளாக இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றளவும் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களின் பட்டியலை எடுத்தாலும் சரி, உலக அளவில் சிறந்த கேப்டன் பட்டியலை எடுத்தாலும் சரி தோனியின் பெயர் இடம் பெறாமல் இருக்காது என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நான் பார்த்த கிரிக்கெட் வரலாற்றில் இம்ரான் கானுக்கு அடுத்து சிறந்த கேப்டன் என்றால் மகேந்திர சிங் தோனி தான் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

நான் இம்ரான் கானை என்னுடைய நாட்களில் மிகச்சிறந்த கேப்டனாக பார்த்தேன். அதற்கடுத்து மகேந்திர சிங் தோனியை மிகச்சிறந்த கேப்டனாக பார்க்கிறேன். ஏனெனில் 2007-ஆம் ஆண்டு ஒரு அனுபவம் இல்லாத இளம் வீரர்களை வைத்துக்கொண்டு டி20 உலக கோப்பையை அவர் கைப்பற்றி தந்தார். அந்த தொடர் முழுவதுமே தனி ஒரு ஆளாக அவர் இந்திய அணியை தூக்கி நிறுத்தினார்.

- Advertisement -

அதன் காரணமாகவே அவரை சிறந்த கேப்டன் என்று கூறுகிறேன். அதுமட்டும் இன்றி பெரிய தொடர்களின் போதெல்லாம் ஒரு கேப்டனாக அவர் வித்தியாசமாக செயல்முறைகளை களத்தில் செய்து காண்பித்துள்ளார். எப்பொழுதுமே ஐசிசி தொடர்களின் போது அனைத்து அணிகளுக்குமே ஒரு மிகப்பெரிய அழுத்தம் இருக்கும்.

இதையும் படிங்க : முகமது சிராஜின் அந்த செயலை என் மகனிடம் கூப்பிட்டு காண்பித்தேன் – இர்பான் பதான் நெகிழ்ச்சி

ஆனால் அதையெல்லாம் சமாளித்து மஹேந்திர சிங் தோனி இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தியதாலே அவரை சிறந்த கேப்டன் என்று கூறுவதாகவும் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -