தோனியை போலவே திலக் வர்மாவிடமும் அந்த தன்மை இருக்கிறது.. பாராட்டி பேசிய – சஞ்சய் மஞ்சரேக்கர்

Tilak-and-MSD
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இறுதி நேரத்தில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

திலக் வர்மாவிடம் அந்த திறமை இருக்கு :

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 165 ரன்கள் குவிக்க 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் இந்திய அணி விளையாடியது. இந்த போட்டிகளில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் பேட்டிங் செய்ய தடுமாறி வேளையில் இளம் வீரரான திலக் வர்மா மட்டும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் 55 பந்துகளை சந்தித்த அவர் நான்கு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர் என 72 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது.

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் திலக் வர்மாவை முன்னாள் கேப்டனான தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : திலக் வர்மாவிடம் பதற்றமும், பயமும் எதுவுமே தெரியவில்லை. 19-வது ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத நிலையிலும் எந்த அழுத்தத்தையும் வெளியில் காட்டாமல் மகிழ்ச்சியுடன் இருந்தார்.

- Advertisement -

பின்னர் 20 ஓவரின் போது சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக போட்டியை முடித்துக் கொடுத்தார். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இது போன்று அழுத்தமான போட்டிகளை வெகு இயல்பாக கொண்டு சென்று வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் தன்னம்பிக்கையுடன் விளையாடியவர். அவரை போன்ற ஒரு தன்னம்பிக்கை திலக் வர்மாவிடம் இருக்கிறது.

இதையும் படிங்க : அந்த அணிக்காக விளையாடியதுதான் ஏ.பி.டி செய்த மிகப்பெரிய தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர்

அவரது மன உறுதி என்னை பிரமிக்க வைத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியின் போது 19-ஆவது ஓவரில் பவுண்டரி செல்லவில்லை என்றால் கூட 20 ஆவது ஓவரில் மகிழ்ச்சியாக போட்டியை முடித்துக்கொடுத்தார். இனிவரும் போட்டிகளில் திலக் வர்மா இன்னும் மிகச்சிறப்பாக செயல்பட்டு பினிஷிங் செய்வார் என சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement