இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது மூன்றாவது இடத்தில் தமிழக வீரரான சாய் சுதர்சனுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான சாய் சுதர்சன் இரண்டாவது இன்னிங்ஸின் போது 30 ரன்கள் குவித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதேவேளையில் அந்த போட்டியில் மிடில் ஆர்டசில் விளையாடிய கருண் நாயரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
3 ஆம் இடத்தில் யார் விளையாடனும்? : சஞ்சய் மஞ்சரேக்கர்
ஆனால் அதற்கு அடுத்த இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது மூன்றாம் இடத்தில் இருந்து நீக்கப்பட்ட சாய் சுதர்சன் தொடர்ந்து பென்ச் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அந்த மூன்றாவது இடத்தில் களமிறங்கிய அனுபவ வீரரான கருண் நாயர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட அந்த மூன்றாவது இடத்திலும் கருண் நாயர் இதுவரை மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரின் 6 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் வெறும் 21 ரன்கள் சராசரியுடன் 131 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக ஒரு அரைசதம் கூட அடிக்காத அவர் அதிகபட்சமாக 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதன் காரணமாக கருண் நாயருக்கு பதிலாக மீண்டும் சாய் சுதர்சனை மூன்றாம் இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்கிற பேச்சு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் மூன்றாம் இடத்திற்கு கருண் நாயர் அல்லது சாய் சுதர்சன் இருவரில் யார் சிறந்த வீரர்? என்பது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் :
எப்போதுமே சாய் சுதர்சன் தான் மூன்றாவது இடத்திற்கான எனது முதன்மை தேர்வாக இருப்பார். ஏனெனில் சாய் சுதர்சன் தனது அறிமுக போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 30 ரன்கள் அடித்து தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தி இருந்தார். இங்கிலாந்து மைதானத்தில் ஃபிளாட் பிட்ச்களில் வலுவிழந்த அந்த பவுலிங் யூனிட்டுக்கு எதிராக அனுபவ வீரரான கருண் நாயர் விளையாடுவதை விட இளம் வீரரான சாய் சுதர்சன் விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : இதுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்.. இந்தியாவால் முடிஞ்சா அங்க வெளியேறி முடியுமா? சல்மான் பட் சவால்
நிர்வாகம் இதுகுறித்த முடிவை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சாய் சுதர்சன் மூன்றாம் இடத்தில் களமிறங்கினால் நிச்சயம் பெரிய இன்னிங்க்ஸை விளையாடும் அளவிற்கு அவரிடம் திறமை இருக்கிறது. எனவே என்னை பொறுத்தவரை கருண் நாயரை விட அந்த இடத்திற்கு நான் சாய் சுதர்சனை தான் கொண்டு வருவேன் என சஞ்சய் மஞ்சரக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



