இதுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்.. இந்தியாவால் முடிஞ்சா அங்க வெளியேறி முடியுமா? சல்மான் பட் சவால்

Salman Butt
- Advertisement -

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் 2025 உலக சாம்பியன்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் துவங்கியுள்ளது. அந்தத் தொடரில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு பதிலடியாக இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுத்தது.

அப்படிப்பட்ட நிலையில் இத்தொடரில் பாகிஸ்தானுடன் நீங்கள் விளையாடலாமா? என்று முன்னாள் இந்திய வீரர்களை சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலிருந்து விலகுவதாக பதான் சகோதரர்கள் ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, தவான் ஆகியோர் அறிவித்தனர். அதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

- Advertisement -

பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்:

இந்நிலையில் இந்தியாவின் இந்த செயலுக்கு தக்க சமயத்தில் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த சாதாரண தொடரில் விலகிய இந்தியா முடிந்தால் ஐசிசி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலகுமா? என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இந்தியா பற்றி மொத்த உலகமும் பேசுகிறது. கிரிக்கெட்டுக்கும் அதனுடைய ரசிகர்களுக்கும் இந்தியா என்ன செய்தியைக் கொடுக்க விரும்புகிறார்கள்? எதை நிரூபிக்க விரும்புகிறார்கள்? இனிமேல் எங்களுடன் உலகக் கோப்பையில் மட்டுமின்றி எந்த ஐசிசி தொடரிலும் விளையாடாதீர்கள். இதை சத்தியமாக செய்யுங்கள். நாங்கள் அனைத்தையும் சொந்த இடத்தில் புரிந்து கொள்கிறோம்”

- Advertisement -

சல்மான் பட் சவால்:

“ஆனால் தற்போது ஒலிம்பிக் உட்பட எந்தத் தொடரிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். தயவு செய்து அதை செய்யுங்கள். அதை பார்க்க விரும்புகிறேன். அந்த லெவலில் இந்தியா எந்தளவுக்கு தங்களுடைய தேசிய வாதத்தைக் காண்பிக்க விரும்புகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறேன். அவர்களுடைய இந்த மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை”

இதையும் படிங்க: அப்படின்னா இந்தியாவின் கம்பேக் கனவு முடிந்ததா? 1937 ஆஸி போல முடியாததை செய்ய வேண்டிய நிலை

“இந்த முடிவை யார் எடுத்தார்கள்? வெறும் 4 – 5 முன்னாள் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவில்லை. அவர்களால் விளையாட விரும்பிய மற்ற இந்திய வீரர்களும் அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டார்கள். பரவாயில்லை. இதை இப்படியே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதற்கான பதிலடிகளை நாங்கள் இந்தியாவுக்கு நினைவூட்டுவோம்” என்று கூறினார்.

Advertisement