சாம்பியன்ஸ் ட்ராபிக்கு ரிஷப் பண்ட் வேண்டாம்.. அந்த 2 பேர் தான் சரியான கீப்பர்.. சஞ்சய் பாங்கார், மஞ்ரேக்கர்

Sanjay Bangar
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அத்தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையில் காயத்திலிருந்து விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகள் அளவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடியதில்லை என்று முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். எனவே கேஎல் ராகுல் தான் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு சரியான விக்கெட் கீப்பர் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

சரியான கீப்பர்:

ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக சூப்பராக விளையாடிய ராகுல் 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தியதாக அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சஞ்சய் பங்கார் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடவில்லை. அவர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி உள்ளார்”

“அதில் அசத்திய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதும் நல்ல ஃபார்மில் இருந்ததில்லை. எனவே கேஎல் ராகுல் தான் உங்களுடைய முதன்மையான விக்கெட் கீப்பர்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் சமீபத்தில் டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்து சதத்தை அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனும் விக்கெட் கீப்பராக தேர்வாக தகுதியானவர் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

ராகுல், சாம்சன்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் சாம்சனை நான் நம்புவராக இருக்கிறேன். ஆம் ஆரம்பத்தில் அவர் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. ஒருவேளை மிடில் ஆர்டர் அவருக்கு பொருத்தமாக இல்லாததாக இருந்திருக்கலாம். ஆனால் கடைசி 10 ஓவர்களில் அதிரடியாக விளையாடக் கூடியவர் இந்தியாவிற்கு தேவைப்பட்டால் சாம்சன் மிகவும் சரியானவர். ரிஷப் பண்ட் பற்றிய பங்கார் கருத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 80 சதமடிச்ச கோலிக்கு சொல்லத் தேவையில்லை.. இதுல முன்னேறுனா ரோஹித் அசத்தலாம்.. சித்து அட்வைஸ்

தொடர்ச்சியாக சஞ்சய் பங்கார் பேசியது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஆகியோர் என்னுடைய 4, 5வது விளையாடக்கூடிய வீரர்கள். ஸ்ரேயாஸ் உலகக்கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார். ராகுல் விக்கெட் கீப்பிங் அற்புதமாக இருந்தது. 5வது இடத்தில் விளையாடுவதற்கு பொருத்தமான அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக பேட்டிங் செய்யக் கூடியவர்” என்று கூறினார்.

Advertisement