வாயி மட்டும் தான் பேசுது, செயல்பாடு ஒன்னுமே இல்ல – விமர்சனத்துக்கு உள்ளான இளம் இந்திய வீரர்

Parag-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற்ற 24-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தானை தோற்கடித்த குஜராத் 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் வாயிலாக இந்த வருடம் பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றியை பதிவு செய்துள்ள குஜராத் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி 8 புள்ளிகளுடன் புதிய முதல் அணியாக முன்னேற்றம் அடைந்துள்ளது. அதேசமயம் நேற்றைய போட்டிக்கு முன்பு வரை முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் 5 போட்டிகளில் 2-வது தோல்வியை பதிவு செய்தாலும் 3 வெற்றிகளைப் பெற்றுள்ளதால் 3-வது இடத்தில் நீடிக்கிறது.

நவிமும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192/4 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் 53/3 என்ற நிலையில் தடுமாறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக பேட்டிங் செய்து 52 பந்துகளில் 87* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் இளம் வீரர் அபினவ் மனோகர் அதிரடியாக 43 (28) ரன்கள் எடுக்க கடைசியில் சரவெடியாக செயல்பட்ட டேவிட் மில்லர் 31* (14) ரன்கள் எடுத்து சிறப்பான பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் சொதப்பல்:
அதை தொடர்ந்து 193 என்ற நல்ல இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 155/9 ரன்களை மட்டுமே எடுத்து பரிதாபமாக தோல்வி அடைந்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் தேவதூத் படிக்கல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 8 (8) ரன்களில் நடையை கட்டினார். மறுபுறம் பட்டாசாக பேட்டிங் செய்த ஜோஸ் பட்லர் மட்டும் 24 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 54 ரன்கள் எடுத்தாலும் பவர்பிளே முடிவதற்குள் ஆட்டமிழந்தார்.

அந்த நிலையில் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 11 (11), ராசி வேன் டெர் டுஷன் 6 (10) என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து களமிறங்கிய சிம்ரோன் ஹெட்மையர் தனது பங்கிற்கு அதிரடியாக 29 (17) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் அவுட்டானார். அந்த சமயத்தில் 12.5 ஓவர்களில் 116/6 என்ற நிலையில் இருந்த ராஜஸ்தானுக்கு அடுத்ததாக ரியன் பராக், ஜிம்மி நீசம் ஆகிய 2 பேட்ஸ்மேன்கள் இருந்ததால் அந்த அணி போராடி வெற்றி பெறும் என அனைவரும் நம்பினர்.

- Advertisement -

மோசமான ரியன் பராக்:
அப்படி பெரிதும் நம்பியிருந்த அந்த ஜோடியில் ரியன் பராக் 18 (16) ரன்களும் நீசம் 17 (15) ரன்களும் எடுத்து அவுட்டாகி ஏமாற்றியதால் இறுதிவரை ராஜஸ்தான் தோல்வி அடைந்தது. இதில் குறிப்பாக இளம் இந்திய வீரர் ரியன் பராக் முக்கிய நேரத்தில் ரன்கள் எடுக்க தவறியது பல ரசிகர்களை கோபமடைய வைத்தது. ஏனெனில் கடந்த 3 வருடங்களில் வெறும் ஒருசில போட்டிகளில் மட்டும் கடைசி நேரத்தில் களமிறங்கிய சிறப்பாக செயல்பட்ட அவர் வருங்காலங்களில் தங்களுக்கு ஒரு நல்ல பினிஷராக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் 3.8 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு சமீபத்திய ஏலத்தில் வாங்கியது.

ஆனால் 12 (9), 5 (4), 8 (4), 18 (16) என இதுவரை அவர் பங்கேற்ற 4 போட்டிகளிலும் பினிஷெராக செயல்பட நல்ல வாய்ப்பு கிடைத்த வேளையில் அதில் சொதப்பிய அவர் வெறும் வாய் பேசுவதற்கும் நடனம் ஆடுவதற்கு தான் சரிப்பட்டு வருவார் என ரசிகர்கள் அவரை விளாசுகின்றனர். ஏனெனில் 2020-ஆம் ஆண்டு முதலும் கடைசியுமாக ஒரு போட்டியில் அபாரமாக செயல்பட்டு பினிஷிங் கொடுத்த அவர் அதைக் கொண்டாடும் வகையில் நடனமாடியதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

- Advertisement -

அத்துடன் அந்த ஒரு போட்டிக்கு பின்பு என்னவோ பல பல சாதனைகளை செய்தது போல் எப்போதும் டுவிட்டரில் கெத்தாக பேசுவதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் அதற்கேற்றார் போல் செயல்பட தவறும் அவரை 2 – 3 வருடங்களாக வாய் மட்டும்தான் பேசுகிறதே தவிர பேட் பேசவில்லை என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

மஞ்ரேக்கர் விமர்சனம்:
இதே காரணத்திற்காக நேற்றைய போட்டி முடிந்த பின் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “கடந்த 2 முழுமையான வருடங்களில் அவரின் பேட்டிங் சராசரி வெறும் 11, ஸ்ட்ரைக் ரேட் 110 என சுமாராக இருந்த போதிலும் ஏலத்தில் அவரை 3.8 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ராஜஸ்தான் வாங்கியது.

இதையும் படிங்க : வெங்கடேஷ் ஐயர், வாஷிங்க்டன் சுந்தர் ஆகிய இருவருக்கும் பாண்டியாவால் வந்த சிக்கல் – அட என்னப்பா இது?

அவரிடம் அந்த அணி நிர்வாகம் பார்த்த ஏதோ ஒரு திறமையை கடந்த 3 வருடங்களாக நாம் பார்க்க முடியவில்லை. தற்போது இளமையாக இருக்கும் ரியன் பராக் வரும் காலங்களில் தன் மீது நம்பிக்கை வைத்த அணி நிர்வாகத்திற்கு கைமாறாக ஏதாவது செய்வார் என நம்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement