இந்த 2 பந்துவீச்சாளர்கள் அரையிறுதிக்கு வேஸ்ட். தொடர்ந்து இந்திய வீரர்களை சீண்டும் மஞ்சரேக்கர்

Sanjay

நேற்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி மழையால் தடைபட்டதால் மீதமுள்ள ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது. 46.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது .மேலும் மீதமுள்ள 3.5 அவர்கள் இன்று வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain

அவ்வப்போது தனது சர்ச்சையான கருத்துக்களால் இந்திய அணியை சீண்டி வருபவர் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இவர் தற்போது வர்ணனையாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய அரையிறுதிப் போட்டிக்கு போட்டியின் போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அதன்படி இந்தியா அரையிறுதி போட்டியில் ரிஸ்க் எடுத்து இருக்கிறது. இன்று களமிறங்கியுள்ள 5 பவுலர்களில் 2 பவுலர்கள் இந்த மைதானத்திற்கு சுத்த வேஸ்ட் என்பது போல தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இரண்டு பேர் யார் என்று நாம் யோசிக்கும் பொழுது முதலில் அவர் ஏற்கனவே வம்பிழுத்த ஜடேஜா ஒருவர் என்று தெரிகிறது. மற்றொருவர் பாண்டியா என்றும் தெரிகிறது. இதைப் போன்ற கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஏற்கனவே ஜடேஜா குறித்து அவர் பேசியது அவருக்கு திருப்பி பதிலடி கொடுத்து நேரடியாக தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சர்ச்சையான கருத்துக்களால் இந்திய அணியை தொடர்ந்து சீண்டி வருவது குறிப்பிடத்தக்கது.