- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரிஷப் பண்ட் தவிர எல்லாரும் இப்படி அவுட்டாகலாமா? பேட்டிங் கோச் இதை சொல்லிக் கொடுங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர்

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரை வென்ற நியூசிலாந்து நவம்பர் ஒன்றாம் தேதி துவங்கிய மூன்றாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 235 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில் எங் 71, டேரில் மிட்சேல் 82 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 5, சுந்தர் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதன் பின் விளையாடிய இந்திய அணி போராடி 263 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 90, ரிஷப் பண்ட் 60 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 171-9 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

தடுமாறும் இந்திய பேட்ஸ்மேன்கள்:

அதிகபட்சமாக வில் எங் 51 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு இதுவரை அதிகபட்சமாக அஸ்வின் 3*, ஜடேஜா 4* விக்கெட்டுகளை எடுத்தனர். தற்போதைய நிலையில் 143 ரன்கள் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்தை விரைவாக சுருட்டி இந்தியா சேசிங் செய்து வெற்றி பெறப் போராட உள்ளது. முன்னதாக இந்த தொடரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடியது தோல்விக்கு முக்கிய காரணமானது.

அதே போல இந்தப் போட்டியிலும் பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களிடம் தடுமாற்றமாகவே விளையாடினார்கள். இந்நிலையில் இது போன்ற பிட்ச்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் பின்னங்காலில் விளையாடினால் வெற்றிகரமாக செயல்படலாம் என்று முன்னாள் வீரர் கூறியுள்ளார். ஆனால் அதை பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்கள் செய்யவில்லை என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

சொல்லிக் கொடுங்க:

எனவே பேட்டிங் பயிற்சியாளர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அந்த யுக்தியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்களிடம் பின்னங்காலில் (பேக் ஃபுட்) விளையாடுவதன் அற்புதத்தை மெதுவாக அறிமுகப்படுத்த வேண்டும்”

இதையும் படிங்க: வான்கடே மைதானத்தில் அனில் கும்ப்ளேவின் மாபெரும் சாதனையை உடைத்த அஸ்வின்.. புதிய சாதனை

“அது இது போன்ற சூழ்நிலைகளில் பேட்ஸ்மேன்கள் தங்களை காத்துக் கொள்வதற்கு எளிதான வழியை கொடுக்கும். அத்துடன் ரன்கள் குவிப்பதற்கான வாய்ப்பையும் கொடுக்கும். ஆனால் ரிஷப் பண்ட் தவிர்த்து மற்ற முதன்மை பேட்ஸ்மேன்கள் முன்னங்காலில் (ஃப்ரண்ட் ஃபுட்) விளையாடி அவுட்டானார்கள்” என்று கூறினார். இந்த நிலையில் மூன்றாவது நாளில் இன்னும் மும்பை மைதானம் பேட்டிங் செய்வதற்கு சவாலாக மாறும் என்பதால் இந்தியா போராடி வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -